மாண்டிசோரி முறை கற்றலில் முக்கியமானது - புலன்கள் மூலம் கற்றல். இவ்விளையாட்டில் தொடுதல் (TOUCH) பயன்படுத்தப்படுக்கிறது.
சில பொருட்களைத் தொட்டு பார்க்க செய்து அவற்றை ஒரு பையில் வைக்க வேண்டும்.
படி 1 : தீஷுவை பைக்குள் கையை விட செய்து பார்க்காமல் தொடுதல் மூலம் தன் கையில் வைத்து இருக்கும் பொருள் என்ன முதலில் சொல்ல செய்தேன்.
படி 2: நான் சொல்லும் பொருளை பையிலிருந்து பார்க்காமல் எடுத்து தர வேண்டும்.
இப்பயிற்சியை நாங்கள் முன்பே செய்து இருந்தோம். இப்பொழுது ஒரே மாதிரியான சற்று கடினமான பொருட்கள் மூலம் செய்தோம். உதாரணத்திற்கு, ஒரு சிறிய பந்து, ஒரு பெரிய பந்து. தீஷு மிகவும் ரசித்து செய்தாள்.
No comments:
Post a Comment