Mystery Bag பயிற்சியின் பொழுது இரண்டு பந்துகள் உபயோகப்படுத்தினோம். ஒன்று தொடுவதற்கு சற்று கடினமானதாகவும் இன்னொன்று சற்று மெதுவாகவும் இருந்தது. அப்பொழுது தான் எனக்கு பொருட்களை தொடுவதற்கு கடினம், மெது என பிரிக்க(Sorting Technique) செல்லிக் கொடுக்கலாம் என்று தோன்றியது. கடினமான பொருட்களுக்கு - பந்து, மெட்டலினாலான பொம்மை, சிறிய புத்தகம் போன்றவையும், மெது பொருட்களுக்கு - Stuffed toys, பந்து, பஞ்சு போன்றவையும் எடுத்துக் கொண்டேன். தீஷுவிற்கு பிரிப்பத்தற்கு கற்றுக் கொடுத்தேன். ஆனால் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. சிறிது நாட்களுக்கு பிறகு முயற்சி செய்யலாம் என்று நினைத்திருக்கிறேன்.
No comments:
Post a Comment