எப்படி ப்ளாஸ்டிங் பொருட்கள் பண்ணுறாங்க? நம்மளும் பண்ணுவோம் என்று தீஷு கேட்டுக் கொண்டியிருந்தாள். உருக்கிய ப்ளாஸ்டிக்கை எந்த வடிவத்தில் ஊற்றுகிறோமோ அந்த வடிவத்தில் வரும் என்று சொன்னேன். உருக்குவது என்றால் என்ன என்றாள். ஒடிந்து வெட்டியாக இருக்கும் கரையான்ஸ்களை(crayons) உருக்க வேண்டும் என்று வெகு நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். இந்த சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக் கொண்டேன்.
முதலில் கரையான்ஸின் மேல் சூற்றியிருக்கும் காகிதத்தை எடுத்தோம். எளிதாக காகிதத்தை எடுப்பதற்கு, சிறிது நேரம் வெந்நீரில் கரையான்ஸை போட வேண்டும். காகிதத்தை எடுத்தவுடன், சிறு சிறு துண்டுகளாக ஒடித்துக் கொண்டோம்.
இரண்டு மூன்று கலர் துண்டுகள் மப்ஃபின் டின்னின்(muffin tin) ஒரு குழியில் வைத்தோம். அவனில் 275 டிகிரியில் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்தோம். அடிக்கடி அவனை திறந்து உருகுவதைப் பார்த்தோம். நன்றாக உருகியவுடன், டின்னை எடுத்து வெளியில் வைத்து விட்டோம். நன்றாக இறுகியவுடன், டின்னை கவிழ்த்து தட்டியவுடன், வெளியை வந்து விட்டன. வட்டமாக மிகவும் அழகாக இருந்தன.
தீஷுவிற்கு மிகவும் பிடித்து விட்டது. ஐந்து விரல்கள் பயன்படுத்திக் கூட கலர் செய்யலாம் என்று சொல்லிக் கொண்டாள். கலர் செய்வதற்கு எளிதாக இருக்கின்றன.
Crayon rubbing நன்றாக செய்ய வருகிறது. ரோட்டின் சொர சொரப்பு எப்படி வரும் என்று பார்க்க தீஷுவிற்கு ஆசை. மாடிப்படியில் அமர்ந்து செய்து பார்த்தாள். கலரிங் அழகாக வந்திருக்கிறது.
Games to play with 3 year old without anything
2 years ago
குட் ட்ரை! நானும் நினைச்சுப்பேன், வெட்டியாக கிடக்கும் க்ரேயான்சை ஏதாவது செய்யணும்னு...நைஸ்!
ReplyDeleteஎம்பொண்ணு ரொம்ப நாளா கேட்டுட்டே இருக்கா இப்டி ஏதாச்சும் புதுசா ட்ரை பண்ணலாம்மான்னு ,நான் புது கிரேயான்ஸ் வாங்கிக்கலாம் பழசை தூக்கிப் போடுன்னு சொல்லிட்டு இருந்தேன்.
ReplyDeleteஇது நல்ல ஐடியா வா இருக்கே!
Nice posting.
நன்றி முல்லை
ReplyDeleteநன்றி Karthiga
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..
ReplyDelete