Monday, August 31, 2009

குடும்ப‌த்துட‌ன் இணை

தீஷு எப்பொழுது உருவ‌ங்க‌ள் வ‌ரைந்தாலும் மூன்று வ‌ரைகிறாள். பெரிய‌து அப்பா, ச‌ற்று சிறிய‌து அம்மா, குட்டி பாப்பா.

மாண்டிசோரி ஆக்டிவிட்டீஸ் ப‌ற்றித் தெரிந்து கொள்ள‌வும் ம‌ற்றும் சில‌ மாண்டிசோரி பொருட்க‌ள் வாங்க‌வும் ந‌ல்லதொரு இட‌ம் இந்த‌ த‌ள‌ம். நான் அடிக்க‌டி இந்த‌ த‌ள‌த்தை ஐடியாக‌ளுக்காக‌ப் பார்வையிடுவேன். த‌ள‌த்தில் க‌ர‌டி, சிங்க‌ம், வாத்து ம‌ற்றும் குர‌ங்கு குடும்ப‌த்தை இணைக்கும் இந்த‌ ஆக்டிவிட்டியைப் பார்த்த‌வுட‌ன், தீஷுவிற்கு பிடிக்கும் என‌ பிரிண்ட‌ அவுட் எடுத்துக் கொண்டேன்.


ஒவ்வொரு ப‌ட‌த்தையும் வெட்டி, க‌லைத்துக் கொள்ள‌ வேண்டும். முத‌ல் ப‌ட‌த்தை எடுத்து சிங்க‌ம் என்று சொல்லி வைத்து விட்டேன். அடுத்த‌ ப‌ட‌த்தை எடுத்து குர‌ங்கு, சிங்க‌ம் இல்லை என்று சொல்லி சிங்க‌த்திற்கு கீழே வைத்துவிட்டேன். அடுத்து ம‌ற்றுமொரு சிங்க‌த்தை எடுத்து, சிங்க‌ம் என்று சொல்லி சிங்க‌த்திற்கு அருகில் வைத்துவிட்டேன். இட‌மிருந்து வ‌ல‌மாக‌ வைத்தால் க‌ண்க‌ளை இட‌மிருந்து வ‌ல‌ம் ந‌க‌ர்த்தும் ப‌யிற்சியாக‌வும் இருக்கும். தீஷு எளிதாக‌ச் செய்வாள் என்று நினைத்தேன். ஆனால் அவ‌ளுக்குக் க‌டின‌மான‌தாக‌ இருந்த‌து. சிங்க‌த்தைப் பார்த்து புலி என்றாள் (ஏன் என்று புரிய‌வில்லை). க‌ர‌டியை குர‌ங்கு என்றாள். க‌ருப்பு வெள்ளையில் பிரிண்ட் அவுட் எடுத்திருந்தேன். அது தான் கார‌ண‌மா இல்லை அப்பா, அம்மா, குட்டி போன்ற‌வ‌ற்றின் முக‌ அமைப்பு மாற்றங்க‌ள் குழ‌ப்ப‌மா என்று தெரிய‌வில்லை. சிங்க‌ம் முதலில் இருந்தாலும், ம‌ற்றொருமொரு சிங்க‌த்தை அருகில் வைக்காம‌ல் கீழே வைத்தாள். அவ‌ளுக்குச் செய்வ‌த‌ற்கு விருப்ப‌மில்லையா என்றும் தெரிய‌வில்லை. சிறிது நாட்க‌ள் க‌ழித்து முய‌ல‌ வேண்டும் என்ற‌ லிஸ்ட்டில் இதுவும் சேர்ந்துவிட்ட‌து.

1 comment:

  1. நல்லது! :-)
    ஆமா தியானா, எதுவாயிருந்தாலும் அதோட அம்மா எங்கே, அப்பா எங்கேன்னு...ரெண்டு முட்டைகளைப் வெட்டி ஒட்டனும், ஒரு புத்தகத்திலே..அதோட பாப்பா எங்கே கேள்வி..அவ்வ்வ் தான்!

    சுட்டிக்கு நன்றி! பார்க்கிறேன் நானும்!

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost