2. தீஷு அவள் பொம்மை போனில் பேசிக் கொண்டிருந்தாள்.
என்னிடம் வந்து
"அம்மா கத்து"
"எதுக்குடா"
"கத்து"
சரி என்று ஆஆஆ என்று கத்தினேன்.
"No shouting.. I am talking on the phone"
இப்படியொரு சம்பவம் அவள் ஸ்கூலில் நடந்து இருக்க வேண்டும். இல்லையென்றால் அவளுக்கு ஒரு முழு வாக்கியம் இங்கிலீஷில் தெரிவதற்கு சான்ஸ் கம்மி.
3. இப்பொழுது டிரேஸிங் பண்ணுவதற்கு தீஷுவிற்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவள் பஸிலில் இருக்கும் Pieces வைத்து டிரேஸ் பண்ணுகிறாள். வட்டம் ஒரளவுக்கு வருகிறது. நுனியுள்ளப் பொருட்கள் சரியாக வருவதில்லை.
4. சென்ற வெள்ளிகிழமை நல்ல Snow பெய்தது. நான்கிலிருந்து ஆறு இன்ஞ் ஸ்னோ வரை இருக்கும். தீஷுவிற்கு விவரம் தெரிந்து முதல் ஸ்னோ. முதலில் பயப்பட்டாள். காலை வைக்க மாட்டேன் என்றாள். அப்புறம் மிகவும் பிடித்து விட்டது. அவளும் அவள் அப்பாவும் அரை மணி நேரம் வரை ஸ்னோவில் விளையாண்டு கொண்டுயிருந்தார்கள். அடுத்த நாள் எழுந்தவுடன் ஸ்னோவில் விளையாட வேண்டும் என்று ஒரே அடம். அப்புறம் ஸ்னோவில் ஒரு வாக் போயிட்டு வந்தார்கள்.
இப்படித்தான் என் பெண் என் அலுவலக அறையிலிருந்து போனில் பேசினால் ஒன்றுமில்லை. அதே வாகனங்களின் சத்தத்தில் பேசினால் அவள் கேட்கும் முதல் கேள்வி அப்பா வண்டில பேசிட்டே வராதே, வீட்டுக்கு வா பேசலாம், இல்ல கோலிஸ் பிடிச்சிக்கும். என்பதுதான்.
ReplyDeleteகுழந்தைகள் குழந்தைகள் அல்ல.
ச்சோ ச்வீட் தீஷீ
ReplyDeleteதீஷு என்னிடம் கிரிபில் பண்ணப் போறேன் என்றாள். அப்படினென்றால் என்ன என்றேன். கிறுக்குவது போல் செய்துக் காட்டினாள். அது Scribble என்று அழுத்திச் சொன்னேன். அவளும் ciribble என்று அழுத்திச் சொல்லிக் காட்டினாள்.
ReplyDeleteகற்றுக்கொடுக்கிறாள் மகள், கற்றுக்கொண்ட அம்மா.
ரசித்தேன் பதிவை..பப்புவும் ட்ரேசிங் செய்கிறாள்..கை விரல்கள் தான் அவளது பேவரிட்!
ReplyDeleteதங்களனைவருக்கும் இனியப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
முதல் வருகைக்கு நன்றி மகி.
ReplyDelete//கற்றுக்கொடுக்கிறாள் மகள், கற்றுக்கொண்ட அம்மா//
உண்மை அமிர்தவர்ஷினி அம்மா.
நன்றி முல்லை.
மிக பயனுள்ள பதிவுகள், பகிர்வுகள்... தொடர்ந்து செய்யுங்கள், நன்றி.
ReplyDeletehahaha I like the phone part... :-) I can imagine you expression then :-). Oh, I've too recorded Alvin's drawing of circle!!!! Wise people think alike... ;-)
ReplyDelete