தொலைக்காட்சியில் 30 நிமிட கமர்ஷியல் பார்க்க நேர்ந்தது. நம் ஊரில் ஏதாவது புது படம் ரிலீஸானால், சில நேரங்களில் 30 நிமிட விளம்பரம் போடுவது போல, இங்கு அடிக்கடி பீக் டைம் இல்லாத நேரத்தில் எல்லாவிதமான பொருட்களுக்கும் போடுவார்கள். அடிக்கடி குழந்தைகளின் படம் காண்பிக்கப்பட்டதால் அந்த விளம்பரத்தைப் பார்க்க ஆரம்பித்தோம். YourBabycanread என்பதன் விளம்பரம்.
சில சிடியும், Flashcardsசும் கொடுப்பார்கள் போலிருக்குது. அதை பிறந்த இரண்டு மூன்று மாதங்களிலிருந்து காண்பிக்க ஆரம்பித்தால், 1 வயதில் வாசிக்க(?) ஆரம்பிப்பார்கள் என்று காட்டப்பட்டது. 50 மாநிலங்கள் சொல்கிறார்கள், அதன் தலைநகரம் சொல்லிகிறார்கள் என்றனர். சில மழலைகளும் சொல்லின. அதிர்ச்சியாக இருந்தது.
இங்கிருக்கும் Kumon போன்ற டியூன் சென்டர்களில் 3 வயது குழந்தைகள் முதல் டியூன்(?) சொல்லிக் கொடுக்கிறார்கள். எனக்கு தெரிந்து இந்திய அடுத்து சீன, ஜப்பான் குழந்தைகள் தான் அதிக எண்ணிக்கையில் அங்கு படிப்பார்கள். அமெரிக்கர்கள் 6 வயது வரை பள்ளியில்(Preschool) சேர்ப்பதே அரிது. குழந்தைகளை குழந்தைகள் போல் வளர்க்க வேண்டும் என்று எண்ணுபவர்கள். அவர்கள் இந்த மாதிரி Early Education உபயோகப்படுத்துகிறார்கள் என்பதே ஆச்சரியம்.
இருபத்திநான்கு மணி நேரத்தில் பதினாறு மணி நேரத்திற்கு மேல் தூங்கும் குழந்தையிடம், அவர்கள் முழித்திருக்கும் சொற்ப நேரத்தில், சுத்தியுள்ள உலகத்தைக் கூட ரசிக்க விடாமல், அவர்களை இப்படி கொடுமைப்படுத்த வேண்டுமா? சீன, இந்திய குழந்தைகளிடம் பிற்காலத்தில் போட்டி போட வேண்டும் என்பதற்கான தயார்ப்படுத்துதலா? இந்த மாதிரி வாசிப்பதும், தலைநகரங்களையும் மனப்பாடம் செய்தலும் ஒரு வயது குழந்தைக்கு தேவையா? புரியவில்லை. பிற்காலத்தில் அவர்கள் நல்லா படிக்கலாம், படிக்காமலும் போகலாம். ஆனால் அவர்கள் குழந்தைப் பருவத்தை இழந்துவிட்டார்கள் என்பது என் கருத்து.
Games to play with 3 year old without anything
2 years ago
/*பிற்காலத்தில் அவர்கள் நல்லா படிக்கலாம், படிக்காமலும் போகலாம். ஆனால் அவர்கள் குழந்தைப் பருவத்தை இழந்துவிட்டார்கள் என்பது என் கருத்து. */
ReplyDeleteஒத்துப் போகிறேன்
இந்த மாதிரி வாசிப்பதும், தலைநகரங்களையும் மனப்பாடம் செய்தலும் ஒரு வயது குழந்தைக்கு தேவையா? புரியவில்லை. பிற்காலத்தில் அவர்கள் நல்லா படிக்கலாம், படிக்காமலும் போகலாம். ஆனால் அவர்கள் குழந்தைப் பருவத்தை இழந்துவிட்டார்கள் என்பது என் கருத்து//
ReplyDeleteசரியாத்தான் சொல்லியிருக்கீங்க.
ஆனால் பணம் பண்ணுனம்னு இறங்கிட்டா குழந்தையாவது ஒன்னாவது.
இதல்லாம் பெத்தவங்க உணரனும்ங்க.