Wednesday, May 15, 2013

ஒண்ணுக்குள்ள ஒண்ணு

ஒரு நாள் அப்பாவின் ஷுவிற்குள் தீஷுவின் ஷு இருந்த‌து. ம‌ற்றொரு நாள் தீஷுவின் தோழியின் ஷுவிற்குள் ஒரு விளையாட்டுப் பொருள் இருந்த‌து. ஒண்ணுக்குள் ஒண்ணு போட்டுப் ப‌ழ‌குவ‌து ஒரு Stage. ச‌ம்மு த‌ற்பொழுது அந்த‌ நிலையில் இருக்கிறாள் என்று புரிந்த‌து.

அத‌ற்கு த‌குந்தாற் போல் விளையாண்டோம். அவ‌ளின் விளையாட்டுப் பொருளைக் கூடிய‌ ம‌ட்டும் உப‌யோக‌ப்ப‌டுத்தாம‌ல், புதுப்புது பொருட்க‌ளை அவ‌ளுக்கு அறிமுக‌ப்ப‌டுத்த‌ வேண்டும் என்ப‌து என் ஆசை.

ஒரு ட‌ப்பாவில் பேனாக்க‌ளைப் போடுத‌ல்





ஒரு டிஸ்யூ ரோலில் பேனாக்க‌ளைப் போடுத‌ல். ரோல் சின்ன‌தாக இருந்த‌தால் பேனா முழுவ‌தும் போக‌வில்லை. அவ‌ளுக்குத் திருப்தியில்லை. அவ‌ள் கையில் எடுத்து முயற்சித்துப் பார்த்தாள்.



ப‌ந்தை ட‌ப்பாவில் போடுத‌ல். பேனா மெலிதாக‌ இருந்த‌தால், அடுத்து நான் தேர்ந்தெடுத்த‌து ச‌ற்று அக‌லமான‌ ப‌ந்து.



அந்த‌ப் ப‌ந்தின் ஓட்டையில் பேனாவைப் போடுத‌ல். ப‌ந்தை அவ‌ளைப் பிடித்துக் கொண்டாள்.

ப‌ந்தின் ஓட்டையில் ப‌ஞ்சைப் போடுத‌ல். முத‌லில் சிறிய ப‌ஞ்சுக‌ள் கொடுத்தேன். அத‌னைப் போட்டாள். அடுத்து ச‌ற்று பெரிய‌ ப‌ஞ்சைக் கொடுத்தேன். அழுத்திப் போடும் பொழுது விர‌ல்க‌ளுக்கு வேலை கொடுக்கும் என்று நினைத்தேன். ஆனால் அவ‌ளின் ஆர்வ‌ம் புதுப் பொருளான‌ ப‌ஞ்சின் மேல் சென்ற‌து. அத‌னை பிய்த்து பிய்த்து விர‌ல்க‌ளுக்கு வேலை கொடுத்தாள். கிட்ட‌த்த‌ட்ட‌ ப‌த்து நிமிட‌ங்க‌ள் பிய்க்கும் வேலையை ம‌ட்டும் செய்தாள்.





இதுப் போல் வெவ்வேறு வ‌டிவ‌ங்க‌ளில் பொருட்க‌ள் கொடுத்து உள்ளே போடுவ‌து செய்கிறோம். அவ‌ளுக்கு ஆர்வ‌ம் இருக்கும் வ‌ரை தொட‌ருவேன்.



8 comments:

  1. எப்படியெல்லாம் 'டெஸ்ட்' வைக்கிறீர்கள்...!

    ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்.. ஆனால் குழந்தைக்கு இது விளையாட்டுத் தானே?

      Delete
  2. குழந்தையும் அம்மாவும் என்றாலே கவிதை விளையாட்டுதான்...!

    ReplyDelete
  3. :-) நல்லாருக்கு....சம்மு ரொம்ப ஆக்டிவ், தியானா!!

    ReplyDelete
  4. வெகுத்தம் ரசித்தேன் :) அருமை தியானா

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost