Monday, May 23, 2011

கலர் சூரியன்



வீட்டிற்கு பெயிண்ட அடிக்க கலர் தேர்ந்தெடுக்க கலர் அட்டைகள் hardware section யில் இருக்கும். ஒரு அட்டையில் ஒரு கலரின் வெவ்வேறு சேடுகள் (Shades..சாரி சேடுக்கு தமிழ் வார்த்தை தெரியவில்லை) இருக்கும். மாண்டிசோரியின் மூன்றாவது கலர் பாக்ஸில் (colour box 3), ஒரு கலரின் வெவ்வேறு சேடுகளை அதன் கலர் அளவு அடிப்படையில் அடுக்க வேண்டும் (from dark to light shades or light to dark shades of the same colour). மாண்டிசோரியின் பாக்ஸ் 3 செய்தோம். முன்பே பள்ளியில் செய்திருக்க வேண்டும். எளிதாக செய்தாள்.



நான் கடையிலிருந்து எடுத்து வரும் பொழுது, ஒரு கலரில் இரண்டு அட்டைகள் எடுத்து வந்துவிட்டேன். முன்பு செய்து போல் மாட்சிங் செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால் தீஷுவிற்கு எளிதாக இருக்கும் என்று தோன்றியது. அதனால் அனைத்து அட்டைகளையும் இணைத்து வாகிங் போகும் பொழுது எடுத்துக் கொண்டு சென்றோம். ஏதாவது பொருள் எங்கள் அட்டையில் இருக்கும் கலரில் ஒத்து இருந்தால் அந்த கலரை அட்டையில் டிக் செய்து கொண்டோம். தீஷுவிற்கு மிகவும் பிடித்திருந்தது. இரண்டு மூன்று நாட்களுக்கு எங்கு சென்றாலும் கலர் அட்டைகளை எடுத்துக் கொண்டு வந்தாள். அவள் கமெண்ட் : எப்ப வாகிங் போனாலும் வெறும் க்ரீன் மட்டும் தான் இருக்கிற மாதிரி தெரியும். நம்ம world ல எவ்வளவு கலர் இருககுமா.. ok. Mission accomplished.

1 comment:

  1. Deekshu Amma , Now mithra is 2 .1 yrs old. I like start some specific montessory activities in Home . can suggest some good sites where i can get the details of activities ?Thank You.

    I am Getting more information from your Blog only. Thanks for the Sharing.

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost