"பன்னிரெண்டிலிருந்து பதினொன்று வரவேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?" என்று அவள் பில்டிங் ப்ளாக்ஸ் வைத்து விளையாடும் பொழுது கேட்டேன். ஒன்றை எடுக்க வேண்டும் என்றாள். கழித்தல் சொல்லித்தரலாம் என்று தோன்றியது .
பில்டிங் ப்ளாக்ஸ் வைத்தே சொல்லித்தரலாம் என்று எடுத்துக் கொண்டேன். பில்டிங் ப்ளாக்ஸ் வைத்து முதலில் எண்கள் வரிசையில் அடுக்கி உள்ளோம். கழித்தல் சொல்லித்தரும் முன் அதே பில்டிங் பிளாக்ஸ் வைத்து கூட்டல் செய்தால் கழித்தலுக்கும் கூட்டலுக்கும் உள்ள வித்தியாசம் புரியும் என்று மூன்று கூட்டல் கணக்கு எழுதினேன். கூட்டல் நன்றாக செய்தாள்.
கழித்தல் கணக்கு எழுதி மைனஸ் குறி சொல்லிக் கொடுத்தேன்.அதன் பின் 5 - 3 எழுதி ஐந்து பில்டிங் ப்ளாக்ஸிலிருந்து மூன்று எடுத்து, மீதம் இரண்டு என்று சொன்னவுடன் புரிந்த மாதிரி தான் தெரிந்தது. அடுத்து 4 - 2 என்று எழுதியவுடன், இரண்டு விடை வந்தவுடன், கணக்கிலிருந்த இரண்டும், விடையிலிருந்த இரண்டும் ஏதோ குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது. 6 - 1 கணக்கை, ஒன்று வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கத் தொடங்கினாள். விடை ஒன்று வர வேண்டாம், ஒன்றை எடுத்தால் போதும் என்று சொன்னப்பின்பும் புரியவில்லை. திஷுவிடம் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினை ஒன்று புரியாவிட்டால் எடுத்து வைத்து விடுவது. போதும் என்று சொல்லி விட்டாள். நானும் சில நாட்கள் கழித்து முயலலாம் என்று எடுத்து வைத்து விட்டேன்.
Games to play with 3 year old without anything
2 years ago
koncha naala avale katthupa. neraya kids kalithala kasta paduvaanga
ReplyDelete