நான்: "அப்பா வர்ற மாதிரி இருக்கு..."
தீஷு: "இவ்வளவு சீக்கிரம் வர மாட்டாரு.."
எதிர்பாராமல் அப்பா வந்தவுடன்,
"அப்பா உனக்குத்தான் நான் ஹார்ட்டு கலர் பண்ணிக்கிட்டு இருக்கேன். பாக்காதே.. போய் ஒளிஞ்சிக்கோ"
என்று தான் கலர் செய்துக் கொண்டிருந்த காகித குவியலின் மேல் படுத்துக் கொண்டாள்.
ஞாயிறு காலை எப்பொழுதும் கிரிக்கெட் விளையாண்டு விட்டு ஒன்பது மணிக்கு வரும் அப்பா, இரண்டு வாரத்திற்கு முன்னால் வந்த ஞாயிறு அன்று எட்டரைக்கு வந்ததால் தான் இந்த கலாட்டா. அப்பா வருவதற்கு நேரம் இருந்ததால் தந்தையர் தினத்திற்காக அவருக்காக கலரிங் செய்து கொண்டிருந்தோம்.
கடந்த இரு வருடங்கள் செய்தவை இங்கும் இங்கும் இருக்கின்றன. இந்த முறை மிகவும் எளிதாக இருந்தால் தீஷுவே செய்து விடுவாள் என்று நினைத்து இதைத் தேர்ந்தெடுத்தேன். கலரிங் நானும் அவளுடன் சேர்ந்து செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டாள். வெட்டுதல், ஓட்டைப் போடுதல், கோர்த்தல் என்று அனைத்து வேலையையும் நானே செய்த மாதிரி இருந்தது.
தீஷு அப்பாவிற்கு பாக்ஸில் வைத்து, கிஃப்ட் போல் கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டாள். பாதர்ஸ் டே என்று சொன்னாலும் , தந்தையர் தினம் என்று சொன்னாலும் கேட்காமல் தொடர்ந்து அப்பா டே என்றே சொல்லிக் கொண்டிருந்தாள். பரிசு அப்பாவிற்கும் பிடித்திருந்தது.
Games to play with 3 year old without anything
2 years ago
வாவ...சோ ஸ்வீட்!
ReplyDeleteஹார்ட் மிகவும் அழகு! :-)