Monday, February 8, 2010

ஒன்று மேல் ஒன்று கட்டி

மதிப்பு தெரியாமல் ஒன்று, இரண்டு என்று சொல்லித்தருவதில் எனக்கு விருப்பமிருப்பதில்லை. ஒன்றின் மதிப்பு, இரண்டின் மதிப்பு, ஒன்றுக்கும் இரண்டிற்கும் எவ்வளவு வித்தியாசமோ அவ்வளவு தான் ஐந்திற்கும் ஆறுக்குமுள்ள வித்தியாசம் முதலியன புரிய வேண்டும் என்பது என் விருப்பம்.



நிறைய விளையாட்டுக்கள் மூலம் கணித அடிப்படை பயின்று இருக்கிறோம். எண்ணும் அதன் மதிப்பும், spindle box, cards and counters 1, cards and counters 2, cuisenaire rods அவற்றில சில. தீஷு எப்பொழுதும் பில்டிங் ப்ளாக்ஸ் வைத்து ஆர்வமாக விளையாட மாட்டாள். பில்டிங் ப்ளாக்ஸிலுள்ள ஒரு கலர் மட்டும் எடுத்துக் கொண்டோம். ஒன்று, ஒன்றின் ஒன்று வைத்து இரண்டு, இரண்டின் மேல் ஒன்று வைத்து மூன்று என எட்டு ராடுகள் செய்து கொண்டோம். எட்டு ராடுகள் செய்யத்தான் ப்ளாக்ஸ் இருந்த்து. அதை வரிசையாக ஒன்று முதல் எட்டு வரை அடுக்கினோம், சிறியது எது பெரியது எது என்று கண்டுபிடித்தோம், 4 +2 = என கூட்டம் செய்தோம். தீஷு மிகவும் ஆர்வமாக ஒரு மணி நேரம் விளையாண்டாள்.
கணித அடிப்படை கற்பதுடன் கை கண் ஒருங்கிணைப்புக்கு ஏற்றது.

1 comment:

  1. நல்லா ஐடியா தியானா. எண்கள் கற்றுக்கொள்ள உதவியிருக்கிறது, இந்த மெத்தட். இப்போல்லாம், பப்புவுக்கு எல்லாத்தையும் ஒரே டவரா கட்டி அசையாம எடுத்துட்டு போறதுதான் இப்போ வேலை.

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost