கடந்த சனி அன்று நல்ல அலைச்சல். மாலை வீட்டிற்கு வந்தப் பின் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்பாவும் தீஷுவும் தான். முதலில் சில புத்தகம் வாசித்தனர்.
பின்பு திடீரென்று அப்பாவுக்கு ரப்பர் பாண்ட் பவர்டு போட் (rubber band powered boat) செய்யும் ஆசை வந்து விட்டது. இருவருமாக சேர்ந்து யூ டியூபில் சில வீடியோக்கள் பார்த்தனர். அவர்கள் செய்த போட் இங்கே.
ஒரு அட்டையில் சதுரமாக வெட்டி கொண்டனர். பின்பு இரு ஓரங்கள் முக்கோணங்கள் வெட்டி வீடு வடிவத்திற்கு வெட்டினர். பின்பு அடி பகுதியில் ஒரு சதுரம் வெட்டி, ஒரங்களை இணைத்து ரப்பர் பாண்ட் மாட்டி விட்டனர்.
வெட்டின சதுரத்தை எடுத்து, மேலும் ஒரங்களில் வெட்டி, அதை சற்று சிறிதாக்கினர். பின் அந்த சதுரத்தை, அதை வெட்டி எடுத்த பகுதியில் மாட்டியிருந்த ரப்பர் பாண்டில் சுற்றித் தரையில் விட்டால் போட் நன்றாக ஓடியது.
தண்ணீரில் விட்டாலும் நன்றாக சென்றது. ஆனால் அட்டை தண்ணீரை உரிந்து விட்டது. அதனால் மீண்டும் அதைப் போல் தெர்மோக்கோலில் செய்தார்கள். அது நன்றாகச் சென்றது. அதை வீடியோ எடுத்தது மட்டும் என் வேலை.
தீஷுவிற்கு மிகவும் பிடித்திருந்தது.
Games to play with 3 year old without anything
2 years ago
No comments:
Post a Comment