Monday, June 28, 2010

சிக்க‌(ல்) தீர்

சில மணி நேரங்கள் செலவழித்து ஆக்டிவிட்டீஸ் தயாரித்து தீஷுவிடம் எடுத்துச் சென்றால் அவளுக்குப் பிடிக்காது. நாம் செலவழித்த நேரம் கூட அவள் உபயோகப்படுத்த மாட்டாள். சிலவற்றுக்கு நம் நேரம் ஒரு விநாடி கூட செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால் தீஷுவால் திரும்ப திரும்ப விளையாடப்படும். அப்படி ஒன்று இது.

என் ஆபிஸிற்கு தினமும் முக்கால் மணி முதல் ஒரு மணி வரை பயணம் செய்ய வேண்டும். அந்தப் பொழுது புத்தகம் வாசிப்பதிலும் பாட்டு கேட்பதிலும் கழியும். ஒரு முறை என் ஹெட்போன் வயரில் சிக்கு விழுந்து விட்டது. ம‌துரையில் சிக்கு என்று சொல்லுவோம். ச‌ரியான‌ த‌மிழ் வார்த்தை தானா என்று தெரிய‌வில்லை. இதை எடுப்பதற்கு எனக்குக் கிட்டத்தட்ட 10 நிமிடம் ஆனது. அப்பொழுது தோன்றியது தான் இந்த யோசனை.



ஹெட்போன் வயரில் சிக்கு எடுப்பது. பார்க்க எளிமையாகத் தோன்றும். ஆனால் சற்று பொறுமையாக ஒவ்வொரு வயராக எடுத்து அவிழ்க்க வேண்டும். இது கை கண் ஒருங்கிணைப்புக்கு ஏற்றது. தீஷுவிற்கு மிகவும் பிடித்து விட்டது. திரும்ப திரும்ப விளையாண்டு கொண்டிருக்கிறாள். நாங்கள் இப்பொழுது அவிழ்ப்பதற்காக உட்கார்ந்து சிக்கு உண்டாக்க வேண்டியிருக்கிறது.

3 comments:

  1. நாங்களும் சிக்குன்னுதான் சொல்லுவோம்..ஆயாதான் சிக்கல்னு சொல்வாங்க!

    ReplyDelete
  2. நல்ல ஐடியா! :-)

    ஆயாவோட நூல்கண்டை சிக்காக்குறதும் பப்புதான்..எடுத்து கொடுக்கிறதும் பப்புதான்! LoL!

    ReplyDelete
  3. தீஷு சமத்து சிக்கு எடுக்கிறாள். என் பொண்ணெல்லாம் போம்மா அப்படீனு போய்விடுவாள் :-)

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost