ஞாயிறு அன்று மழை வருவது போல் இருந்ததால் வெளியே செல்ல முடியாமல் மீண்டும் இந்த 100 பீஸ் பஸில் செய்தோம். சென்ற முறை போல் நானும் தீஷுவும் ஒரு டீம், அப்பா தனி டீம். நாங்கள் இருவர் என்பதால் வேகம் அதிகம் என்று நினைக்கக் கூடாது. தீஷுவின் தான் எல்லாம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நம் பொறுமையை சோதித்துவிடும். இருந்தாலும் எங்கள் கூட்டாணியே பாதிக்கு மேல் சேர்த்தோம். அன்று போல் இன்றும் தீஷு அப்பாவை வெறுப்பேத்திக் கொண்டேயிருந்தாள். சென்ற முறை போட்டோ எடுக்க முடியவில்லை. இந்த முறை போட்டோ எடுக்கும் முன் தீஷு அதன் மேல் படுத்துவிட்டாள். பஸில் கிட்டத்தட்ட நான்கு அடி.
தீஷுவிற்கு இப்பொழுது செயல்முறைகளை விட பேப்பரில் செய்யும் வொர்க் ஸீட்டுகளில் விருப்பமிருப்பதால், http://www.prekinders.com/ மெய்ந்து கொண்டிருந்தேன். அப்பொழுது இந்த Pattern Blocks பார்த்து எனக்கு மிகவும் சந்தோஷம். ஏனென்றால் எங்களிடம் இருக்கும் Blocks க்கு இந்த படங்கள் பொருத்தமாக இருக்கும். எங்களிடம் இருக்கும் படங்களில் வண்ணங்கள் இருக்கும். அதனால் வண்ணங்கள் இல்லாத படங்கள் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டோம். தீஷு நன்றாகச் செய்தாள். முடித்தவுடன் படங்கள் இல்லாமல் வடிவங்கள் வைத்து வெவ்வேறு வடிவங்கள் செய்து கொண்டிருந்தோம். Visual discrimination க்கு ஏற்றது
வாவ்...100 பீஸ் பஸில்!! எங்கே கிடைக்கிறது..? அமெரிக்கா என்று சொல்லி என்னை கடுப்பாக்காதீர்கள்!! :)))
ReplyDeleteபஸில் ப்ளாக்ஸ் நல்ல கான்செப்ட்..நாங்கள் இன்னும் பில்டிங் ப்ளாக்ஸிலிருந்தே வெளிவரவில்லை!! ;-))
ஸாரி முல்லை.. அமெரிக்கா என்று சொல்லி கடுப்படிக்கத்தான் வேணும் :)). பாட்டன் ப்ளாக்ஸ் இங்க கிடைக்கிது முல்லை..
ReplyDeleteஎத்தனை பீஸ் உள்ள பஸில் இது? நிறைய என்றால் குழந்தைகளுக்கு போரடித்துவிடும்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநன்றி புதுகைத் தென்றல்
ReplyDeleteநன்றி அமித்து அம்மா
100௦௦ பீஸ் சின்ன அம்மிணி.. நாங்களும் செய்வதால் அவளுக்குத தெரிவதில்லை