Sunday, November 22, 2009

ஸ்பைடர் மேன் ஸ்பைடர் மேன் - பெங்களூர் புத்தகக்கண்காட்சி

சென்ற வாரம் பெங்களூர் புத்தகக் கண்காட்சி சென்றிருந்தோம். காலை முதல் மழை பெய்வது போல் இருட்டிக்கொண்டேயிருந்தது. அப்படித்தான் இருக்கும் ஆனால் பெய்யாது என்று ஒரு நம்பிக்கையில் சாயங்காலம் கிளம்பிவிட்டோம். பாலஸ் கிராவுண்டில் புத்தகக் கண்காட்சி. நாங்கள் பாலஸ் கிராவுண்ட் என்று நினைத்துச் சென்ற இடத்தில் கண்காட்சி நடப்பது போல் ஒரு அறிகுறியே இல்லை. பக்கத்தில் விசாரித்ததில் நேராகச்செல்ல வேண்டும் என்றார்கள். ஆனால் எவ்வளவு தூரம் என்று சொல்லவில்லை. இங்கு அங்கு விசாரித்து, லேஃப்ட் போய், ரைட் போய் என எங்கு வந்திருக்கிறோம் என்று பார்த்தால் கிட்டத்தட்ட 30 கிமி. உள்ளே நுழையும் முன்னே மனதில் சின்ன எண்ணம் - கிளம்பும் முன் மழை வந்துவிடக்கூடாது என. நாங்கள் எங்கு இருக்கும் என்று எங்களுக்கேத் தெரியாததால் ஒரு மணி நேரமே இருக்க வேண்டும் என்று பேசிக்கொண்டோம்.

முதலில் நுழைந்தவுடனே இடது பக்கத்தில் தமிழ் கடை. அப்பா எங்களை மறந்து விட்டார். புத்தகங்களை அள்ள ஆரம்பித்து விட்டார். சாவியின் வாஷிங்டனில் திருமணம் நான் வாங்கச் சொன்னேன். தீஷு ஆரம்பித்து விட்டாள்.. "அம்மா பசிக்குது..". என்னால் பார்க்கக்கூட முடியவில்லை. அடுத்த கடையில் நான் Chetan Bhagat தின் 2 states வாங்கினேன். Lords of the rings வெகு நேரம் யோசித்து பின்பு இவ்வளவு பெரிய புஃகை என்னைக்கும் படிக்க முடியாது என்று வாங்கவில்லை. அடுத்து ஒரு கடையையும் தீஷு பார்க்க விடவில்லை. அப்பா கையில் புத்தகங்கள் இருந்ததால் நான் அவளை தூக்க வேண்டியிருந்தது. என்னால் தூக்கிக்கொண்டு பார்க்க முடியவில்லை. தீஷுவிற்கு என மூன்று வாசிக்கப்பழக சிறு வாக்கியங்கள் கொண்ட புத்தகங்கள் வாங்கினோம். பின்பு இந்திரா செளந்திர்ராஜனின் சிவம் வாங்கினோம்.

பின்பு ஒரு கடையில் குழந்தைகளின் புத்தகங்கள் பத்து ரூபாய் என பழைய புத்தகங்கள் கிடைத்தன. அதில் வெகு நாட்களாகத் தேடிக் கொண்டிருந்த முத்துகள் சில கிடைத்தன.

பத்து டாலர் என்று மிரட்டிய புத்தம் - Hush little baby (நூறு தடவைக்கு மேல் வாசித்தாகி விட்டது.)


I Spy ( Library யில் படித்தது இப்பொழுது சொந்தமாக)








புத்தகக் குவியலில் தேடிக்கொண்டிருக்கும் பொழுது தான் தீஷு இத எடுத்துக்கிடவா என்றாள். அவசரத்தில் பார்க்காமல் புத்தகம் தானே என்று சரி என்றேன். பணம் கொடுக்கும் பொழுது தான் பார்த்தேன் அது ஒரு ஸ்பைடர் மேன் புத்தகம். தீஷுவிற்கு பார்னி மட்டுமே முன்பு தெரியும். இப்பொழுது ஸ்பைடர் மிகவும் கவர்ந்து விட்டர். நான் யூ டியூபில் ஆரம்பப்பாடல் காண்பித்தேன். மிகவும் பிடித்து விட்டது. ஸ்பைடர் மேன் பறப்பாரு, இங்க பாரு டிரெஸில் ஸ்பைடர், இவர் மேன் அதனால தான் ஸ்பைடர் மேன் என எனக்குப் பல தகவல்கள் தருகிறாள்.


விகடன் பிரசுரத்தைப் பார்த்தவுடன் கிடைத்த மகிழ்ச்சியை இங்கிருந்த புத்தகங்களால் தக்க வைக்க முடியவில்லை. நான் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த கிராமத்து விளையாட்டுகள் கிடைக்கவில்லை. அப்பா விஷ்ணுபுராணம் வாங்க வேண்டும் என்றார். தீஷுவின் நிஜமா சொல்றேன் அம்மா.. ரெம்ப பசிக்குது என்ற வாக்கியம் எங்களை கிளப்பியது. வெளியே சாப்பிடும் இடம் வந்தவுடன் நேரம் பார்த்தல் இரண்டரை மணி நேரம் ஆகி இருந்தது.


மழையின் கவலையுடனும், தீஷுவின் தொல்லையுடனும் எங்கள் முதல் புத்தகக் கண்காட்சி அனுபவம் இனிதே முடிந்தது. அடுத்த வருஷம் உன்னைய யார்கிட்டயாவது விட்டிட்டு தான் வருவோம் என்று அவளே மிரட்டிக்கொண்டும், மழை வரக்கூடாது என வேண்டிக் கொண்டும் வீடு வந்தோம்

1 comment:

  1. ஆகா..போனீங்களா?! pratham books ட்ரை பண்ணி பாருங்களேன்..ஆனலைனில் வாங்க முடியலை..(செக் அனுப்பனும், அதுக்கு ஒரு சோம்பேறித்தனம்!!)

    இந்த ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், அப்புறம் இன்னும் ஒன்னு கூட சொன்னா பப்பு..எல்லாத்துக்கும் வித்தியாசத்தோட! ஸ்கூல்ல பேசிப்பாங்க போல! இதுவரைக்கும் பப்பு அதெல்லாம் பார்த்ததில்லை...ஸ்பைடர்மேன் சுட்டி டீவிலே ஒரு 30 நிமிஷம் பார்த்ததுக்கே இந்த எஃபக்ட்!!

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost