1. தீஷு: "அப்பா.. படிச்சிட்டு புஃக்கை புஃக் ஸெல்ப்ல வைக்காம ஸோபாலே வச்சிட்ட பாரு.ஏன்?"
அப்பா : "எடுத்து வைச்சிடுறேன் டா.."
தீஷு : "சரி, எடுத்து வைக்கும் பொழுது கீழ இருக்கிற என் புஃக்கையும் எடுத்து வச்சிடு.."
2. தீஷு ஸட் டவுன் செய்து கொண்டிருக்கும் பொழுது, லாப் டாப்பை மூடப் போனாள்.
அம்மா :"தீஷு, மூடாத..."
தீஷு : "ஏன்?"
அம்மா : "ஸிஸ்டம் கெட்டு போயிடும்"
தீஷு : "சாப்பிடுகிற பொருள் தானே கெட்டு போகும்.. ஸிஸ்டம் எப்படி கெட்டு போகும்?"
3. கடந்த நான்கு தினங்களாக தீஷுவிற்கு கடிமையான ஜுரம். ஒரு நாள் கிட்டத்தட்ட 104C.என்ன மருந்து கொடுத்தாலும் குறையவேயில்லை. ஜுரத்தினால் தூக்கத்தில் அரற்றிக் கொண்டிருந்தாள். அப்பொழுது தனியாக அவளை கவனித்துக் கொண்டிருந்த எனக்கு பயமாக இருந்தது. ஆனால் இப்பொழுது சரியாகி விட்டதால், அவள் தூக்கத்தில் சொன்னது சந்தோஷமாக இருக்கிறது.. அவள் சொன்னது "அம்மா... எனக்குப் புஃக் படிச்சுக் காட்டு.. இன்னொரு புஃக் படிச்சுக் காட்டு.." திரும்ப திரும்ப 10 தடவைக்கு மேல்..
Games to play with 3 year old without anything
2 years ago
//சரி, எடுத்து வைக்கும் பொழுது கீழ இருக்கிற என் புஃக்கையும் எடுத்து வச்சிடு.."//
ReplyDeleteரசித்தேன்.
அச்சோ..சோ சாட்! :((
ReplyDeleteஎன்ன ஆச்சு தீஷூவுக்கு?!! அவளுக்கு புத்தகங்கள் மேலே அவ்வளவு ஆசையா!! சந்தோஷமாக இருக்கிறது!
அப்புறம், /"சரி, எடுத்து வைக்கும் பொழுது கீழ இருக்கிற என் புஃக்கையும் எடுத்து வச்சிடு.."/
அவ்வ்வ்வ்வ்! :))