Saturday, November 7, 2009

ஆப்பிள் வாங்கலையா ?? ஆப்பிள்...

தீஷுவின் ஆர்வம் இப்பொழுது கற்பனை விளையாட்டுகளின் மேல் (Creative play).அவளின் ஆர்வத்திற்கு தகுந்தாற் போல் எங்கள் விளையாட்டுகளை மாற்றி அமைத்துக் கொண்டோம். அதில் ஒன்று மார்க்கெட் விளையாட்டு. ரூபாய் நூறு, பத்து, ஐந்து, இரண்டு, ஒன்று என்று எடுத்துக் கொண்டோம். சில விளையாட்டு காய்கறி ஆப்பிள், ஆரெஞ்ச், கிரேப்ஸ், முட்டை கோஸ் போன்றன எடுத்துக் கொண்டோம். முதலில் தீஷுவிற்கு வாங்குபவர்கள் பணம் கொடுக்க வேண்டும், விற்பவர்கள் காய்கறி கொடுக்க வேண்டும் என்று புரிய வைக்கவே நேரம் எடுத்தது. அவளுக்கு கைப்பையையும் அவள் எடுத்து வர வேண்டும், பணமும் அவள் கொடுக்க வேண்டும், காயையும் அவள் கொடுக்க வேண்டும். விளக்கியப்பின் நன்றாக விளையாண்டாள். அவள் தான் வாங்குபவள். ஆப்பிள் எவ்வளவு என்றாள். பத்து ரூபாய் என்றவுடன் பத்து ரூபாய் எடுத்துக் கொண்டே "ஆப்பிள் அடிப்பட்டு இருக்கு.. வேற ஆப்பிள் தாங்க.." என்றாள்... பிழைத்துக் கொள்வாள் என்று நினைத்துக் கொண்டேன்.

இவ்வாறாக அவள் காய்களை எடுத்துச் சென்று சமைப்பது வரை எங்கள் விளையாட்டு தொடர்ந்தது. இரண்டு ஐந்து பத்து எனவும், ஐந்து ஒரு ரூபாய் ஐந்து ரூபாய் என விளக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. பணத்தைப் பிரிக்கவும், கேட்கும் பணத்தை சரியாக எடுத்துக் கொடுக்கவும் பழகிக்கொண்டாள். எங்கு சென்றாலும் கார்ட்டு கொண்டு வாங்குவதால், பணம் கொடுத்தால் தான் பொருள் கிடைக்கும் என்பதை விளையாட்டுகள் மூலம் விளக்க வேண்டிய நிலை.. என்ன செய்வது?

3 comments:

  1. நல்ல பகிர்வு!

    /"ஆப்பிள் அடிப்பட்டு இருக்கு.. வேற ஆப்பிள் தாங்க.." என்றாள்.../

    :)) ரசித்தேன்!!


    பப்புவுக்கு பெரும்பாலும் இந்த இமேஜினரி விளையாட்டு, இமேஜினரி கேரக்டர்கள் - பூனை, புலி, சிங்கம்,ரைனோ-தான்!

    /பணம் கொடுத்தால் தான் பொருள் கிடைக்கும் என்பதை விளையாட்டுகள் மூலம் விளக்க வேண்டிய நிலை/



    :-)

    ReplyDelete
  2. /"ஆப்பிள் அடிப்பட்டு இருக்கு.. வேற ஆப்பிள் தாங்க.." என்றாள்.../


    ஆஹா, நல்ல விவரம்தான்.

    ம், வர்ஷினிக்கும் இந்த விளாட்டு (அவங்களோட பாஷை) புடிக்கும்.

    இந்தாங்க, க்காளி, பத்துவா குடுங்க :)))))

    என்பாள்

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost