1. தீஷு ஒரு மீன் பொம்மை எடுத்து வந்து,
"அம்மா, இந்த மீன் பெயர் தெரியுமா?"
"தெரியலையேடா"
"ஸ்வைன் ஃபிஷ்"
2. வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்க வேண்டிய லிஸ்ட்டை எழுதி வைத்திருப்போம். அதில் தீஷு OPAT என்று எழுதி வைத்திருந்தாள். அப்பா,
"என்ன வாங்கணுமினு எழுதியிருக்க?"
"O says ஆ, ஆ வாங்கணுமினு எழுதியிருக்கேன்..
சிறுது நேரங்கழித்து அவளாகவே, O says ஆ.., ஆரெஞ்ச் வாங்கணுமினு எழுதி வைத்திருக்கிறேன் என்றாள்.
3. அப்பா பிரெஷ் செய்து விடும் பொழுது,
"எங்க இரண்டு பேருக்கும்(தனக்கும் தீஷுவிற்கும்) எல்லாம் தெரியும்.. இரண்டு பேரும் நோபல் பிரைஸ் வாங்க போகிறோம்.. ஏண்டா தீஷு"
(எங்கே தன்னை தனியா அனுப்பிவிடுவார்களோ என்று பயந்து) "வாங்க நீயும் கூட வருவியா?"
"ஆமாடா"
"சரி வா..இப்பவே போய் வாங்கிட்டு வந்திடுவோம்"
"சும்மா குடுக்க மாட்டாங்க.. ஏதாவது புதுசா கண்டுபிடிச்சாத்தான் கொடுப்பாங்க"
அனைவரும் தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க,சில நிமிடங்களில் தீஷு ஓடி வந்து
"கண்டுபிடிச்சிட்டேன்.. கண்டுபிடிச்சிட்டேன்"
என்ன என்று பார்த்தால், நான் ஒரு புது பஸில் வாங்கி வைத்திருந்த கவர். அவளைப் பொருத்தவரை பார்த்திராத புதிய பொருள்.. கண்டுபிடித்து எடுத்து வந்திருக்கிறாள் நோபால் பரிசு வாங்குவதற்காக..
Games to play with 3 year old without anything
2 years ago
அருமையான தருணங்கள்தான். இதொ
ReplyDeleteதீஷுவுக்கு நோபல் கொடுத்துட்டேன்!!
சூப்பர்...மிகவும் ரசித்தேன்!! ”கண்டுபிடிச்சுட்டேன்” - கலக்கல்!! அழகான பகிர்வு!!
ReplyDeleteரசித்தேன். என்னையும் கவர்ந்த தருணங்கள் .
ReplyDeleteசில நிமிடங்களில் தீஷு ஓடி வந்து
ReplyDelete"கண்டுபிடிச்சிட்டேன்.. கண்டுபிடிச்சிட்டேன்" //
அழகு!
நன்றி வல்லி அம்மா..
ReplyDeleteநன்றி முல்லை
நன்றி சின்ன அம்மிணி
நன்றி அமித்து அம்மா
நன்றி அமுதா