Monday, November 16, 2009

பட்டாம் பூச்சி வந்தது எப்படி?

தீஷுவிற்கு அவளுக்குப் புரியும் வகையில் மாதமொரு அறிவியல் தகவல் சொல்லித்தர வேண்டும் என்று நினைத்திருந்தேன். இரண்டு மூன்று மாதங்களாக ஆபிஸ் வேலையை விட சொந்த வேலைகள் அதிகம். அதில் எனக்குத் தயார் செய்ய நேரம் கிடைக்க வில்லை. இப்படியே விட்டால் எப்பொழுதும் செய்ய முடியாது என்று என்னால் முடிந்த வரை முயற்சி செய்து, பட்டாம் பூச்சியின் வளர்ச்சி படிகள் பற்றி கடந்த ஒரு மாதமாக சொல்லிக் கொடுக்கிறேன்.

1. முதலில் பட்டாம் பூச்சியின் சுழற்சியை விளக்கும் புத்தகமான Caterpillars by Robyn Green வாசித்தோம். The very hungry caterpillar புத்தகம் இல்லை. இருந்திருந்தால் அதை விட நல்ல புத்தகம் கிடையாது.

2. பின்பு நெட்டிலிருந்து படங்கள் எடுத்து வந்து அவளை அடுக்கச் செய்தேன்.

3. பெயிண்ட்டை பேப்பரின் நடுவில் கொட்டி, இரண்டாக பேப்பரை மடித்து, பட்டாம் பூச்சிகள் செய்தோம்.

4. ஸீக்கொன்சிங் கார்டு வைத்து அதன் வளர்ச்சிப்படிகளை வரிசையாக அடுக்கினோம்.


பட்டாம்பூச்சி மையமாக வைத்து எண்ணுதல், கூட்டல்,மாட்சிங் முதலிய அட்டைகள் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். முடியவில்லை. அடுத்த தகவல் படிக்கும் முன் நன்றாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.

2 comments:

  1. நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. எனது கொலீக்கிடமிருந்து அந்தப் புத்தகத்தை வாங்கி வாசித்தோம் - சிறிது நாட்கள்! அதன்பின்னர், http://www.rif.org/assets/Documents/readingplanet/ReadAloud_Stories/KatrinaCaterpillar.html இந்தக் கதையும் பார்த்தோம். அப்புறம், படங்கள் வரைவது! சீக்கொன்சிங் கார்ட் முறை நன்றாக இருக்கும் போல தெரிகிறது - நீங்கள் சொல்வதிலிருந்து!!

    சீசன்களை எப்படி சுவாரசியமாக கற்றுக்கொள்ளலாமென்று தெரிந்தால் பகிர்ந்துக்கொள்ளுங்களேன், தியானா! :-)

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost