தீஷுவின் வயதிற்கு ஏற்ப அவளுக்கு அறிவியலை அறிமுகப்படுத்தலாம் என்று ஒரு லிஸ்ட் தயாரித்தேன். அதில் முதலில் இருந்தது செடிகளின் வளர்ச்சி.
எங்களிடம் Eric Carle இன் The Tiny seed புத்தகம் இருக்கிறது. அதில் ஒரு பூவின் மகரந்தத்திலிருந்து பறக்கும் விதைகளில் ஒரு சின்ன விதை இருக்கும். பறக்கும் பொழுது ஒரு விதை வெப்பத்தில் எரிந்து விடும், ஒன்று பாலைவனத்தில் விழுந்து விடும், ஒன்று கடலில், ஒன்றை பறவை தின்று விடும், ஒன்றை எலி என்று சில விதைகள் போனப்பின் சில விதைகள் மீதமிருந்து வளரும். வளரும் பொழுது மற்ற செடிகள் பல் வேறு காரணங்களால் மறைய, சின்ன விதை செடி மட்டும் இருக்கும். இது வளர்ந்து பெரிய செடியாக வளர்ந்து, அதன் பெரிய பூவிலிருந்து மீண்டும் விதைகள் பறக்க ஆரம்பிப்பது போன்று மரங்களின் சுழல்ச்சியும், வெவ்வேறு சீதோஷன நிலைகளும் விளக்கப்பட்டுயிருக்கும். அந்த புத்தகத்தை தினம் படித்து, நாங்கள் கப்பில் வளர்த்த செடிகளின் வளர்ச்சியை பார்த்தோம். ஒரளவு அவளுக்கு செடிகள் பற்றி தெரிந்து கொணடவுடன், செடிகளின் வளர்ச்சி பற்றிய சீக்கொன்சிங் கார்ட்ஸ் இங்கிருந்து பிரிண்ட் அவுட் எடுத்து வளர்ச்சிக்கு தகுந்தாற் போல் அடுக்க வைத்தேன்.
அது செடிகள் பற்றிய ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது. விதைகளிலிருந்து மட்டும் தான் வளருமா ஏன் பூ இதழ்களில் வளராதா என்று கேட்டு, கடந்த இரண்டு நாளாக ஒரு பூவின் இதழ்களை மண்ணில் போட்டு வைத்து, அதற்கு தண்ணீரும் ஊற்றுகிறாள். அது அவளுக்கு ஒரு நல்லதொரு பயிற்சியாக இருக்கும்.
Games to play with 3 year old without anything
2 years ago
//ஏன் பூ இதழ்களில் வளராதா என்று கேட்டு, //
ReplyDeletecute
/*ஏன் பூ இதழ்களில் வளராதா என்று கேட்டு, கடந்த இரண்டு நாளாக ஒரு பூவின் இதழ்களை மண்ணில் போட்டு வைத்து, அதற்கு தண்ணீரும் ஊற்றுகிறாள்.*/
ReplyDeleteகேட்பதோடு நிற்காமல், செய்தும் பார்க்கிறாளே!!! சொன்னதோடு நிற்காமல் செய்ய விட்டீர்களே!!! இருவருக்கும் பாராட்டுக்கள்
இலைகளில்/ தண்டுகளில் முளைக்கும் செடிகள் உள்ளனவே ? ரோஜா செடியே பதியன் போட்டு தானே வளர்க்கிறோம்.
ReplyDeleteபயனுள்ள இடுகை...சயிண்டிஸ்ட்-க்கு வாழ்த்துகள்!
ReplyDeleteஅந்த புத்தகத்தை சில பக்கங்களோடு அம்மாக்கள் வலைப்பூவில் அறிமுகப்படுத்துங்களேன், நேரமிருந்தால்!
Nice theme to teach her.
ReplyDelete