சில மாதங்களாக பால் பாட்டில் மூடிகளை சேமித்து வைத்திருந்தேன். கிட்டத்தட்ட இருபது இருந்தது. அதை சம்முவின் முன் கொட்டியவுடன், அவள் முகத்தில் ஆச்சரியம் தோன்றி மறைந்தது. உடனே விளையாட ஆரம்பித்தாள்.
அவளாக விளையாண்டது போக நான் விளையாடச் செய்ததை இங்கு தொகுத்திருக்கிறேன். அவள் செய்யும் பொழுது படங்கள் எடுத்தால் அவளுக்குக் கவனச்சிதறல் இருப்பதால், படங்கள் தனியாக எடுத்தேன்.
பல்லாங்குழியில் மூடிகளை போடுதல் :
பல்லாங்குழியை மூடி மூடிகளை அடுக்குதல் :
உண்டியல் ஓட்டையில் மூடிகள் போகவில்லை என்பதால், நான் துளையிட்ட பெட்டியில் மூடிகளை போடுதல் :
ஊதா நிற மூடிகளை ஊதா பெட்டியிலும் சிவப்பு நிற மூடிகளை சிவப்பு நிற பெட்டியிலும் போடதல் (Colour Sorting):
பெரிய குழந்தைகளுக்கு பாட்டனிங்(Pattern), எண்ணுதல்(Counting), மூடியில் எழுத்துகள் எழுதி வரிசையாக அடுக்கச் செய்தல், மூடியில் எண்கள் எழுதி வரிசையாக அடுக்கச் செய்தல் என பல விளையாட்டுகள் விளையாடலாம்.
அருமையான விளையாட்டு.
ReplyDeleteவாழ்த்துக்கள் குழந்தைகளுக்கு.
மிக சிறந்த பதிவு.
ReplyDeleteஎன் தமிழ்மணம் + 1 வோட்டு போட்டு விட்டேன்.
நன்றி!
நல்ல விளையாட்டு... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவண்ணமயமான விளையாட்டு..அருமை தியானா!
ReplyDeleteகருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல!!
ReplyDeleteசிறப்பான பகிர்வு.
ReplyDelete