இந்த இடுகை சின்னச்சிறு விரல்களுக்கு வேலை கொடுக்க செய்த விளையாட்டுகளின் தொகுப்பு. இவை கடந்த மூன்று மாதங்களில் வெவ்வேறு தருணங்களில் செய்த விளையாட்டுகள். பொருட்களை எளிதாக எடுக்க விடாமல், சற்று அழுத்தி இழுத்து விரல்களுக்கு வேலை கொடுத்தேன்.
1. வெல்கரோ
சோபாவிலிருந்த வெல்கரோவில் மர விளையாட்டுப் பொருட்களின் வெல்கரோவை ஒட்ட ஒட்ட, எடுக்க வேண்டும். இது அனைத்து விரல்களுக்கும் வேலை கொடுக்கும்.
2. செல்லோ டேப் பொம்மைகள்
பொம்மைகளை செல்லோ டேப்பால் ஓட்டி வைத்து விட்டேன். பொம்மைகளை எடுக்க வேண்டும்.
3. செல்லோ டேப்
பொம்மைகளை எடுத்தப்பின் மீதமிருந்த செல்லோ டேப்பை எடுப்பதே ஒரு சிறு விளையாட்டானது.
4. காந்த வடிவங்கள்
இது தீஷுவின் விளையாட்டு சாதனம். காந்த வடிவங்களை இரும்பு தட்டிலிருந்து எடுக்க வேண்டும்.
5. ஃப்ரிட்ஜில் காந்த வடிவங்கள்
ஃப்ரிட்ஜி கதவில் காந்த வடிவங்களை ஒட்டி வைத்தை எடுக்க வேண்டும். விரல்களுடன் தோள் எலும்புகளுக்கும் வேலை.
6. பென்சில் டப்பா
பென்சில் டப்பாவை திறந்து மூடுதல்
7. சிடி
அதன் பெட்டியிலிருந்து சிடியை எடுத்தல்.
எனக்கு சம்மு செய்யும் பொழுது படங்கள் எடுப்பது கடினமாக இருக்கிறது. நான் படங்கள் எடுக்கிறேன் என்று தெரிந்தால், அவள் கவனம் சிதறுகிறது. ஆகையால் இனிமேல் அவள் செய்யும் பொழுது எடுக்காமல் உபயோகப்படுத்திய பொருட்களை மட்டும் படம் எடுத்துப் போடுகிறேன்.
சிறப்பான பயிற்சிகள்..
ReplyDeleteநன்றி அம்மா
Deleteநல்ல ஐடியாங்க. படங்கள் எல்லாமே அழகா, அம்சமா இருக்கு.
ReplyDeleteநன்றி ஜோசப் அய்யா
Deleteஅழகு.. அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநல்ல பயிற்சி..... தொடரட்டும்....
ReplyDeleteத.ம. 2
பயிற்சிகளை விளையாட்டாகச் சொல்லித் தரும் பாணி நன்றாக உள்ளது.அருமை வாழ்த்துக்க்கள்
ReplyDeleteநன்றி Viya Pathy உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்
DeleteNice one Dhiyana! Esp this cello tape/sticker activities amuse kids....:-)
ReplyDeleteநன்றி முல்லை
Deleteநல்ல பயிற்சிகள் தியானா..பாராட்டுகள்!
ReplyDeleteநன்றி கிரேஸ்
Delete