சம்முவின் விளையாட்டுப் பொருளையே எடுத்துக் கொண்டேன். துளைகள் உள்ள அட்டையில் கலர் குச்சிகளை மாட்ட வேண்டும். மேலும் சில பஞ்சுகளை கொடுத்தேன்.
1. முதலில் பஞ்சுகளை கையில் எடுத்து குச்சிகள் மீது வைத்தாள். மிகவும் எளிதானது.
2. பின்பு ஒரு சிறு விளையாட்டு இடுக்கிக் கொண்டு பஞ்சை எடுத்து வைத்தாள்.
3. ஸ்பூனில் பஞ்சை எடுத்து குச்சியின் வைக்க வேண்டும். நிறைய கவனம் தேவை.
4. கண்ணை மூடிக்கொண்டு இடுக்கியால் பஞ்சை எடுத்து குச்சியில் வைக்க வேண்டும். கடினம்.
5. கண்ணை மூடிக் கொண்டு ஸ்பூனால் பஞ்சை எடுத்து குச்சியில் வைக்க வேண்டும். மிகவும் கடினம்.
தீஷு ஒரு மணி நேரத்திற்கு மேலாக விளையாண்டு கொண்டிருந்தாள். நாங்கள் மிகவும் மகிழ்ந்து அனுபவிக்கும் எங்கள் இருவருக்குமான விளையாட்டு நேரத்தை மீண்டும் கண்டுபிடித்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி.
கொஞ்சம் சிரமம் தான்... ஆனாலும் சுவாரஸ்யம்...
ReplyDeleteநன்றி தனபாலன்!!
ReplyDeleteவயதிற்கேற்ற மாறுபாடு.... கொஞ்சம் சிரமமாக இருந்தாலும்....
ReplyDeleteசற்று சிரமம் தான் வெங்கட்.. தங்கள் வருகைக்கு நன்றிகள்!!!
ReplyDeleteநல்ல விளையாட்டு, தியானா!
ReplyDeleteகண்ணை மூடிக்கொண்டு குழந்தைகளை விளையாடச் செய்வது (முக்கியமாக 7வயதிலிருந்து) மிகவும் பிடிக்கிறது என்றே நினைக்கிறது. பப்புவுக்கு, கண்ணை மூடிக்கொண்டு நடப்பது, கண்ணை மூடிக்கொண்டு பின்னால் நடப்பது, கண்ணை மூடிக்கொண்டு ஊசி நூல் கோர்ப்பது எல்லாம் பிடித்தமானவை!! :))
நன்றி முல்லை... அப்படித்தான் நானும் நினைக்கிறேன்..கண்ணை மூடிக் கொண்டு ஊசியில் நூல் கோர்ப்பது மிகவும் கஷ்டம் ஆச்சே..பப்பு கலக்குகிறாள்!!
ReplyDeleteஎன்னென்னவோ செய்கிறாய் தியானா..பெண் இல்லையே என்று ஏக்கம் வருகிறது...பையன்கள் இப்பொழுது என்னுடன் விளையாடுவது மிகவும் குறைந்துவிட்டது.
ReplyDelete