Monday, November 4, 2013

திருடப்பட்ட சில படங்கள்

தான் வளர்ந்தவுடன் ஓவியராவேன் என்று சில முறை தீஷு சொல்லி கேட்டுயிருக்கிறேன். சென்ற வருடம் இன்ஜினியர் என்றும் அதற்கு முன்பு கார் டிரைவர் என்று வருட வருடம் அவள் இலக்கு மாறும் என்பதால் சரி என்பதுடன் நிறுத்திவிட்டேன். ஓவியராக விருப்பம் இருப்பதால் தினமும் பயிற்சி செய்யப் போகிறேன் என்றாள். 

இன்று அவள் புத்தகங்களை அடுக்கி வைத்துக் கொண்டு இருந்தேன். ஆர்ட் என்று எழுதி அருகில் இரண்டு இதயங்கள் வரைந்த அட்டையுடன் ஒரு நோட் புக் ஒன்று இருந்தது. ஆர்வம் மிகுதியால் என்னவென்று திறந்து பார்த்தால், மூன்று படங்கள் இருந்தன.


முதல் பக்கத்தில் மாடர்ன் ஆர்ட் என்று ஒரு படம். கீழே அவள் பெயரையும் எழுதியிருந்தாள். 



இரண்டாவது படத்தில் இரு இதயங்கள். ஒன்று வேறொரு காகிதத்தில் வரைந்து ஒட்டியிருந்தாள். இரண்டாவது நேரடியாக புத்தகத்தில் வரைந்திருந்தாள்.


மூன்றாவது இலைகள் இல்லாத மரங்களின் படங்கள். அதன் எதிர்பக்கத்தில் ஒரு சிறு குறிப்பு. அது தான் என்னை மிகவும் கவர்ந்தது. 





அந்தக் குறிப்பு இது தான் : This art is made of blending. We use tissues to make it blend. One thing I know that art is always different because even if we do the same thing it is always different. 

தீஷு தன் எதிர்கால கனவு குறித்து மேலும் பல முறை மாற்றங்கள் செய்வாள் என்பது உறுதி. ஆனால் இப்பொழுது தனக்குள்ள கனவுக்கு அவளாகவே பயிற்சி எடுத்தது எனக்கு மகிழ்ச்சியளித்தது!! 

11 comments:

  1. This is really amazing for her age ..it's a good attitude .you have been a good role model for her.

    ReplyDelete
  2. This is really amazing for her age ..it's a good attitude .you have been a good role model for her.

    ReplyDelete
  3. இந்தக்காலக் குழந்தைகள் படு தெளிவாக இருக்கிறார்கள். தீஷுவின் கனவு எதுவாயினும் நல்லபடியாய் அத்துறையில் சிறப்பிடம் பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. குழந்தையின் படங்கள் அருமை..... ஆர்வம் தொடரட்டும்.

    குழந்தைக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    ReplyDelete
  5. வெகு அருமை தியானா...எவ்வளவு அழகாக வரைந்து குறிப்பும் எழுதி வைத்திருக்கிறாள்! உனக்கும் தீக்ஷுவிற்கும் என் வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. வணக்கம்
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. This is really amazing for her to exercise some creativity and do such paintings :) azhagu! :)

    ReplyDelete
  8. perspective in the third one is good.
    so also her definition for art!!

    ReplyDelete
  9. The third art is really impressive.... Good Luck to the little angel....

    ReplyDelete
  10. கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல!!

    ReplyDelete
  11. வாவ்! அனைத்து படங்களுமே அருமையாக இருக்கின்றன தியானா! அந்த குறிப்புதான் டாப்! :‍) தீஷூவின் வருங்காலத்துக்கு வாழ்த்துகள்!! :-)

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost