குழந்தைகள் சேர்ந்து விளையாடுதல் என்பது கிட்டத்தட்ட இல்லாத நிலை இங்கு நிலவுகிறது. மாலையில் படிப்பில் பிஸியாக இருப்பார்களோ என்று ஐயத்துடன் சேர்ந்து விளையாட பிற குழந்தைகளை அழைப்பதற்கு சங்கடமாக இருக்கிறது. வீட்டில் சேர்ந்து விளையாடுவது மட்டும் தான் இப்பொழுது இருக்கும் ஒரே வழி. என் இரு குழந்தைகளுக்கும் இடையில் கிட்டத்தட்ட ஆறு வயது வித்தியாசம். அவர்களால் சேர்ந்து விளையாட முடியாமா என்று நான் யோசித்தது உண்டு.
விதிகளோடு விளையாடப்படும் விளையாட்டுகளை இருவரும் சேர்ந்து விளையாட இப்பொழுது முடியாது. ஆனால் பொருட்களை கொடுத்து விட்டு எப்படி வேண்டுமென்றாலும் விளையாடலாம் என்றால் சேர்ந்து விளையாடுகிறார்கள். கடந்த வாரம் மீண்டும் மீண்டும் அவர்களால் விளையாடப்பட்டது காராமணி.
ஓட்டையுள்ள பாத்திரத்தை (வெஜிடபிள் ஸ்டீமர்) ஒரு கண்ணாடி தட்டின் மேல் கவிழ்த்து வைத்துவிட்டேன். காராமணியை ஒரு கிண்ணத்தில் கொடுத்தேன். ஒவ்வொரு காராமணியாக எடுத்து ஓட்டைக்குள் போட வேண்டும் என்று சம்முவிடம் கொடுத்தேன். உள்ளே இருக்கும் கண்ணாடி தட்டில் பட்டு ஒரு சின்ன ஒலி வந்தது. இது அவளுக்குப் பிடித்திருந்தது. மாலையில் தீஷு வந்தவுடன் இருவரும் சேர்ந்து விளையாட ஆரம்பித்தனர்.
தீஷு பல விளையாட்டுகளை தங்கைக்குக் கற்றுக் கொடுத்தாள்.
1. காரமணியை ஓட்டையின் அருகே வைத்துவிட்டு, ஊதி ஓட்டைக்குள் போடுதல்
2. ஒரு காரமணியை வைத்து சுண்டி(கோலி குண்டு விளையாடுவது போல்) போடுதல்
3. கையை சற்று உயர்த்தி ஒட்டைக்குள் போடுதல்
4. நின்று கொண்டு போடுதல்
5. ஒவ்வொன்றாக எடுக்காமல், மூன்று நான்கு எடுத்து அனைத்தையும் போடுதால்.
அரைமணி நேரத்திற்கு மேல் விளையாண்டார்கள். தீஷு டான்ஸ் வகுப்புக்கு நேரமானதால் விளையாட்டு தடைப்பட்டது. சம்மு தன் அக்காவிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டாள்.
ரசிக்க வைக்கும் விளையாட்டுக்கள்...
ReplyDeleteநன்றி தனபாலன்!!
Deleteவணக்கம்
ReplyDeleteபதிவு அருமையாக எழுதியள்ளீர்கள் வாழ்த்துக்கள்....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்!!
Deleteவிதிமுறைகள் இல்லாமல் தானாய் விளையாடவிட்டால் குழந்தைகள் கலக்குகிறார்கள்..ஆனால் இதைப் படி, அதைப்படி என்று சொல்லும்படி காலம் மாறிவிட்டிருக்கிறது...
ReplyDeleteஅருமையான விளையாட்டு தியானா, தீக்ஷு அழகாகப் பலவிதமாய் விளையாடிப்பார்த்திருக்கிறாள். அவளுக்கு என் வாழ்த்துக்கள்!
நன்றி கிரேஸ்!!
Deleteஅருமையான விளையாட்டுக்கள்.
ReplyDeleteகுழந்தைகளுக்கு பொழுது நல்லபடியாக போகிறது. புதுசு புதுசாய் சிந்திக்கும் மன நிலை ஏற்படுகிறது.
இங்கு பேரனுடன் விளையாட ஆள் இல்லை அவனாக நிறைய கற்பனை செய்து விளையாடுவான். இப்போது நாங்கள் இருப்பதால் எங்களுடன் விளையாடுகிறான்.
நன்றி கோமதி அம்மா!!
Deleteஇருவரும் சேர்ந்து விளையாடத் தொடங்கிவிட்டால் நீங்கள்தான் பாவம், தியானா!! :)
ReplyDeleteஉண்மை முல்லை.. ஆனால் சில நேரங்களில் தொந்தரவு இல்லாமல் இருக்கிறது :))
Deleteகுழந்தைகள் விளையாட விலையுயர்ந்த பொருட்கள் தேவையில்லை என்று நிரூபித்து விட்டீர்கள். அருமை!
ReplyDeleteகுழந்தைகளை அவர்கள் போக்கில் - அதாவது தாங்களாகவே வேறு வேறு முறைகளைக் கண்டுபிடித்து விளையாட விட வேண்டும். அதுதான் அவர்களை மேலும் மேலும் கற்க வைக்கும். நாளை நான் எழுதிவரும் குழந்தைகள் வளர்ப்புத் தொடரில் இதைத்தான் சொல்லியிருக்கிறேன். திஷூவும் சம்முவும் இதைத்தான் செய்கிறார்கள். குழந்தைகளுக்கு ஆசிகள்.
டாக்டர் ஸ்பாக் சொல்லியிருக்கும் கருத்துக்களுடன், என் அனுபவங்களையும் பகிர்ந்து இருக்கிறேன்.
உங்கள் எழுத்துக்களிலிருந்து நானும் நிறைய கற்கிறேன், தியானா. நிறைய பேருக்கு உங்கள் யோசனைகளைச் சொல்லுகிறேன். உங்கள் தளம் ரொம்பவும் உபயோகமாக இருக்கிறது.
பாராட்டுக்கள்!
நன்றி அம்மா!! உங்கள் கருத்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியும் உற்சாகமும் அளித்தது. நாளை உங்கள் பதிவைப் படிக்க ஆவலாக இருக்கிறேன்..
Delete