Saturday, October 12, 2013

குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் ‍‍

நாம் வளரும் பொழுது இல்லாத பல விஷயங்களை கடக்காமல் இப்பொழுதுள்ள குழந்தைகள் வளர முடியாது. அவற்றில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. நம் குழந்தைகளுக்கு எவ்வாறு அவ்விஷயங்களை கடக்கக் கற்றுக் கொடுக்கிறோம் அல்லது அவர்களை எவ்வாறு காத்து வருகிறோம் என்பதை எழுதலாம் என்று ஒரு குழு இணைந்துள்ளோம். இதுவரை நான், சித்திரக்கூடம் வரையும் சந்தனமுல்லை மற்றும் தேன் மதுரத் தமிழ் முழங்கச் செய்யும் கிரேஸ் இணைந்துள்ளோம். எங்களுடன் இணைய விரும்புவோர் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். 

குழுவின் முதல் இடுகையான அடுத்த இடுகை நாம் அனைவரும் சந்திக்கும் தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், ஐபேட் என்ற மின்ன‌ணுசார் கருவிகளின் தாக்கம் பற்றியது. சந்தனமுல்லை தன் அனுபவத்தைப் பகிர்ந்து இருக்கிறார்.

தங்கள் கருத்துகளை அறியவும் ஆவலாக இருக்கிறோம். உங்கள் அனுபங்களையும் எங்களுடன் பின்னூட்டத்தின் மூலம் பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம். நன்றி!!

9 comments:

  1. மூவரும் இணைந்து சிறப்பாக பகிர்ந்திட மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி தனபாலன்!!

      Delete
  2. பகிர்விற்கு நன்றி தியானா!
    வாழ்த்திற்கு நன்றி திரு.தனபாலன்!

    ReplyDelete
    Replies
    1. இணைந்து செயல்படுத்துவோம் கிரேஸ்!!

      Delete
  3. வணக்கம்
    நல்ல விடயம் மூன்று வேந்தர்களுக்கும் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. வாழ்த்துகளும் & நன்றிகளும் தியானா!
    பிற அனுபவங்களையும் வாசிக்க காத்திருக்கிறேன்.

    பி.கு:
    சித்திரக்கூடம் என்று மாற்றி விடுங்கள், தியானா. :‍)

    ReplyDelete
    Replies
    1. நன்றி முல்லை..மாற்றி விட்டேன்:))

      Delete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost