Friday, June 28, 2013

பேப்பர் கப்

இந்தப் பேப்பர் கப்பில் உணவு பொருட்கள் உபயோகப்படுத்த முடியாது. ஆனால் பார்ப்பதற்கு அழகான‌வும் செய்வதற்கு எளிதானதும் ஆகும்.




தேவையானப் பொருட்கள் :

1. ஒரு கிண்ணம்

2. பாலிதீன் பேப்பர்

3. செய்தித்தாள்

4. கோந்து

5. பெயிண்ட் (விருப்பப்பட்டால்)

செய்முறை :

1. கிண்ணத்தை பாலிதீன் பேப்பர் சுற்றி வைக்க வேண்டும்.


2. செய்தித்தாளை சிறு சிறு துண்டாகக் கிழித்துக் கொள்ளவும்.

3. கோந்தில் 2 : 1 என்ற முறையில் தண்ணீர் சேர்க்கவும்.

4. பேப்பரை கோந்தில் தொட்டு, பாலிதீன் பேப்பர் மேல் ஒட்டவும்.

5. மூன்று லேயருக்குக் குறையாமல் பேப்பர் ஒட்டவும்.

6. 10 - 12 மணி நேரம் காயவிடவும்

7. காய்ந்தவுடன் மெதுவாக எடுத்தால் பேப்பர் கப் எடுக்க வரும்.



8.  விருப்பப்பட்டால் பெயிண்ட் செய்து அலங்கரிக்கலாம்.





நாங்கள் வெளிபுறம் மட்டும் வண்ணம் தீட்டினோம். கனம் இல்லாத பொருட்கள் வைக்க உபயோகப்படுத்தலாம்.

இதே முறையில் நாங்கள் முன்பே செய்திருந்தவை - Light Shade and பறவைக் கூடு

Light Shade


பறவைக் கூடு


13 comments:

  1. மிக அருமை, சிறாருக்கு இத்தகைய திறன்களை பயிற்றுவித்தால் அவர்தம் மூளை, மன வளர்ச்சி பெருகுமல்லவா?

    ReplyDelete
  2. ஆர்வம்... பொறுமை... திறமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன்..

      Delete
  3. இதில் முதலில் பாலிதீன் காகிதம் சுற்றுவதற்குப் பதிலாக, முதல் லேயர் மட்டும் பசை இல்லாத வெறும் தண்ணீரால் ஒட்டலாம். காய்ந்த பிறகு சுலபமாக்கஃ கழன்று வந்துவிடும். இது இன்னும் கொஞ்சம் சலபமான முறை. இந்த விதத்தில் நான் முன்பு எப்போதோ ஒரு மர யானையைப் பயன்படுத்தி காகித யானை, மற்றும் சில எளிய பொருட்கள் செய்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் பயனுள்ள தகவல் சரவணன். நன்றி. அடுத்த முறை முயற்சி செய்துப் பார்க்கிறேன்.

      Delete
  4. அழகாக இருக்கிறது தியானா .. என்னருகில் இருந்திருந்தால் பெரிய பானையே செய்திருக்கலாம்..அவ்வளவு காகிதம் கிழித்திருப்பேன் கடந்த வாரத்தில்.. :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிரேஸ்.. யாரும் உன்னைப் பார்த்து என்ன செய்து கிழித்தாய் என்று கேட்க முடியாது :‍))

      Delete
  5. புதிது புதியாக யோசனை செய்கிறீர்கள் தியானா... வாழ்த்துகள்.

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost