Tuesday, June 18, 2013

பம்ப்..

தண்ணீர் நம் மீது தெறிக்கும் பொழுது நாம் அனைவரும் உற்வாகம் அடைவது உறுதி. மேலிருந்து கீழ் நோக்கி பாயும் தன்மையுடைய தண்ணீரை, கீழே இருந்து மேலே செலுத்த‌ ஒரு சக்தி வேண்டும் என்று புரிய ஒரு சோதனை செய்தோம். இந்தச் சோதனைக்கு வீட்டில் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்கள் மட்டுமே தேவை.

தேவையானப் பொருட்கள்:
1. ஸ்ட்ரா ( Drinking Straw)

2. ஒரு கூர்மையான நுனியுடைய குச்சி

3. ஸெல்லோ டேப்

செய்முறை:

1. ஸ்ட்ராவின் நடுவில் துளையிட்டு, அதனுள் குச்சியை நுழைக்க வேண்டும். நாங்கள் சிக்குவாரி உபயோகப்படுத்தினோம்.2. நுழைத்திருக்கும் பகுதியிலிருந்து இரு பக்கமும் சரியான இடைவெளியில் கத்திரியால பாதி அளவு வெட்ட வேண்டும். முழுதாக ஸ்ட்ராவை வெட்டக் கூடாது. அந்த வெட்டப்பட்ட பகுதியால் இப்பொழுது ஸ்ட்ராவை மடிக்க முடியும்.


3. வெட்டப்பட்ட பகுதியை மடித்து, ஒரங்களை குச்சியுடன் இணைத்து, டேப்பால் ஒட்ட வேண்டும்.

4. இப்பொழுது பம்ப் ரெடி.

5. ஒரு டம்பளரில் தண்ணீர் எடுத்து, ஒட்டிய பகுதியை தண்ணீரில் போட்டு, குச்சியை மோர் கடைவது போல் உருட்ட வேண்டும். வெட்டிய பகுதியிலிருந்து நீர் தெறிக்கும்.
மிகவும் எளிமையான சோதனை. ஐடியா இந்த வீடியோவிலிருந்து எடுத்தது.

http://www.youtube.com/watch?v=11r3E4eia0U

முயற்சித்துப் பாருங்களேன்.. உங்கள் குட்டீஸுக்கும் பிடிக்கும்.. 

  

7 comments:

 1. அழகாக உள்ளது... செய்து பார்ப்போம்... இணைப்பிலும் பார்க்கிறேன்... நன்றி...

  ReplyDelete
 2. பயனுடய பதிவு. பிள்ளைகள் அதிலும் கோடைகாலமெனில் மிக மகிழ்வார்கள்.

  எனக்கு இந்த சிக்குவாரி ஒரு புதினமான பொருளாக இருக்கிறது. இது வரை நான் அதனைக் கண்டதில்லை.

  அது பற்றி மேலும் அறிய ஆவல்.

  தையலூசி, குண்டூசி,றேந்தை ஊசி,ஸ்வெட்டர் பின்னும் ஊசி, சாக்கூசி, குத்தூசி,குழைகுத்தும் ஊசி, அலுவாங்கு, என நீளும் ஒரு வரிசையில் மேலும் ஒன்று போலும்.

  இவை பற்றி ஒரு கட்டுரை எழுதிய குறையில் இருக்கிறது. உங்கள் சிக்கூசி பற்றி அறிந்தால் மேலும் பயனுடயதாக இருக்கும்.

  ReplyDelete
 3. மணிமேகலா, த‌ங்கள் வருகைக்கு நன்றி. சிக்குவாரி என்பது தலை முடியிலுள்ள சிக்குகளை அகற்றுவதற்கு பயன்படுவது. சிக்குவாரி, சிடுக்குவாரி, சிணுகோலி என்று பல பேர்களில் அறியப்படுகிறது. மேலும் தகவலுக்கு http://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF

  ReplyDelete
 4. நன்றி தியானா.

  அமெரிக்கக் கடைகளிலும் கிடைக்கின்றனவா? அல்லது நீளக்கூந்தலைக் கொண்டிருக்கும் பாரதத்துப் பெண்களுக்காக பாரதம் மட்டும் தனக்கென கண்டு பிடித்த நூதனமா?

  இலங்கையில் அதனைப் பாவித்ததாக தெரியவில்லை. நான் அறிந்தவரை சிட்னியிலும் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. மணிமேகலா, அமெரிக்கக் கடைகளில் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. இந்தியாவிலிருந்து எடுத்து வந்தேன். இது இந்தியர்களின் கண்டுபிடிப்பு என்று நினைக்கிறேன் :))

   ஒரு சுவரஸ்யத் தகவல். எங்கள் வழக்கப்படி பெண்கள் திருமணமாகி செல்லும் பொழுது தாய் வீட்டுச் சீதனத்தில் சிக்குவாரியும் கொடுத்து அனுப்புவார்கள். இது என் அம்மா கொடுத்தது..

   Delete
 5. வாவ்! தாங்ஸ்ம்மா.சுவாரிஷமான மேலதிக தகவலுக்கும். அது அழகாகவும் தான் இருக்கிறது.நமக்கு தெரியாமலே எத்தனை எத்தனை கண்டுபிடிப்புகள் பார்த்தீர்களா?

  ReplyDelete
 6. வாவ்! தாங்ஸ்ம்மா.சுவாரிஷமான மேலதிக தகவலுக்கும். அது அழகாகவும் தான் இருக்கிறது.நமக்கு தெரியாமலே எத்தனை எத்தனை கண்டுபிடிப்புகள் பார்த்தீர்களா?

  ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost