Monday, June 10, 2013

அட்டைப் பெட்டிகள்..

இப்பொழுது எங்கும் அட்டைப் பெட்டிகள் கிடைக்கின்றன‌. எந்த ஒரு உணவு பொருளும் அட்டைப் பெட்டியில் தான் வருகின்றது. இந்தப் பதிவு அட்டைப் பெட்டிகளைத் தூக்கிப் போடும் முன் வெவ்வேறு தருணங்களில் செய்தவைகளின் தொகுப்பு.

1.  பீட்ஸா பெட்டியில் பில்டிங் செட்

 அட்டையை சதுரமாக வெட்டி, அதின் ஓரங்களில் ஆங்காங்கே 1 இன்ச் அளவிற்கு வெட்டினேன். அந்த வெட்டிய பகுதிகளை இணைத்து விளையாடுதல்





2. கார்ன் பிளேக்ஸ் பெட்டியில் பஸில்  

  பெட்டியின் வண்ணமயமான அட்டையைக் கருத்தில் கொண்டு பஸில் இணைக்க வேண்டும்.




3. கார்ன் பிளேக்ஸ் பெட்டியில் பஸில்

   இரண்டில் உபயோகப்படுத்திய அதேப் பெட்டி தான். ஆனால் அந்த முறையில் உட்புறம் திருப்பி பஸில் இணைக்க வேண்டும். நான் தீஷுவிற்கு கணிதத்திற்கு உபயோகப்படுத்தி இருக்கிறேன். நம் குழந்தைகள் அந்த நேரத்தில் என்ன கற்கிறார்களோ அதை எழுதி பயன்படுத்தலாம்.





4. கார்ன் பிளேக்ஸ் பெட்டியில் ஸ்டென்ஸில்
  
    வெவ்வேறு வடிவங்கள் வரைந்து வெட்டி எடுத்து விட வேண்டும். அதை ஸ்டென்ஸிலாக வைத்து வடிவங்களை பேப்பரில் வரையவோ பெயிண்டோ செய்ய சொல்லாம்.




5.  கார்ன் பிளேக்ஸ் பெட்டியில் தையல்
    நான்கில் வெட்டி எடுத்த வடிவங்களின் ஓரத்தில் சிறு இடைவெளிகளில் ஓட்டைகள் போட்டு வைத்து விட்டேன். தையல் பழக்க வசதியாக இருந்தது.



6.  கார்ன் பிளேக்ஸ் பெட்டியில் வீடு

    நிறைய முறை செய்திருக்கிறோம். ஆனால் படம் கிடைக்க வில்லை. மேல் பகுதியில் வெட்டி வீடு வடிவத்தில் செய்து, குழந்தைகள் சொப்பு சாமான்கள் வைத்து விளையாடவிடுதல்.

7.  டையபர் பெட்டியில் டனல்
 
    தவழும் வயதிலுள்ள குழந்தைக்கு, பெட்டியை இரண்டு பக்கமும் திறந்து, உள்ளே தவழ விடுதல். பெரியவர்கள் கூட முயற்சி செய்யலாம் :‍))



நீங்கள் வேறு ஐடியாக்களைப் பகிருங்களேன்..





12 comments:

  1. ஐடியாக்கள் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. உங்களின் creativity வியக்க வைக்கிறது தியானா.
    சின்னக் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் பலருக்கும் பயன்படும் இந்த ஐடியாக்கள்!
    வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!

    ReplyDelete
  3. நல்ல யோசனைகள். டனல் சூப்பர்:)!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராமலக்ஷ்மி மேடம்..

      Delete
  4. உன் ஆக்கச்சிந்தனைக்கு எல்லையே இல்ல போப்பா... :)
    நான் சில டப்பாக்களை வண்ண காகிதம் ஒட்டி சுவற்றில் பதித்து சிறிய அலங்காரப் பொருட்கள் வைக்கவும், ஒன்றில் பென்சில் வைக்கும் வசதியும் செய்து தொலைபேசி எண்கள் எழுதவும் வைத்தேன். என் பையன்கள் டப்பாக்களை வண்டிகளாகச் செய்வார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிரேஸ் :‍)). வாவ்!! நான் கூட உன் ஐடியாக்களை முயற்சி செய்து பார்க்கிறேன்.

      Delete
  5. மிக அருமையான பதிவு. முதலில் உங்களுக்கு எனது பாராட்டுக்கள், கல்பனை வளத்தை பிள்ளைகளிடம் வளர்த்தெடுப்பது அவர்கள் வாழ்க்கைக்கு மிகவும் பயன்மிக்கது, மூளைச் சோர்வை விரட்டவல்லது, ஏட்டுக் கல்வி, வீட்டுக்குள் முடங்கும் யந்திர விளையாட்டுகளை ஊக்குவிக்கும் பெற்றோர் மத்தியில் உங்களைப் போன்றோர் வியக்க வைக்கின்றனர். :)

    ReplyDelete
    Replies
    1. உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி இக்பால் செல்வன்..

      Delete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost