Wednesday, May 18, 2011

உலக உருண்டையும் பறவைக் கூடும்

விழா முடிவில் பொருள்கள் மிச்சமாவதை தடுக்க முடியாது. இந்த முறை தீஷுவின் பிறந்த நாள் விழா முடிந்தவுடன், மிகுந்து இருந்தது வெடிக்காமல் இருந்த பலூன்கள். அவைகளை வைத்து ஆக்டிவிட்டீஸ் செய்தோம்.



அவளுக்கு வந்த கிஃப்ட் ஒன்றில், கிஃப்ட உடையாமல் இருப்பதற்காக டிரேஸ்சிங் பேப்பர் போன்ற மெல்லிய கலர் காகிதம் ஒன்று இருந்தது. அந்த காகிதத்தை சிறிது சிறிதாக கிழித்துக் கொண்டோம். பசையை எடுத்து அதில் சரி பாதி தண்ணீர் கலந்து கொண்டோம். பலூனை ஒரு கிண்ணத்தில் வைத்துவிட்டு, பலூன் மீது தண்ணீர் கலந்த பசையைத் தடவி, அதில் கிழித்த காகிதத்தை ஒட்டிக் கொண்டு வந்தோம். வரிசையாக ஒட்ட வேண்டும் என்பதில்லை.

முழு பலூனையும் முடித்தவுடன், மூன்று மணி நேரம் வரை காய விட்டோம்.



நன்றாக காய்ந்தவுடன், பலூனில் சிறு ஓட்டைப் போட்டு காற்றை வெளியேற்றினோம். சில இடங்களில் பேப்பர் பலூனில் ஒட்டிக் கொண்டு எடுக்கும் பொழுது கிழிந்தது. பசையில் இன்னும் தண்ணீர் உபயோகப்படுத்தி இருக்க வேண்டும். காற்று வெளியேறிய பின், முழு பலூனையும் எடுத்தப்பின் காகிதம் பலூன் வடிவத்தில் இருந்தது. அதனை எங்கள் நைட் லாம்ப்பின் மேல் வைத்தவுடன், தீஷுவின் கமெண்ட்.."சூப்பர்.. ".




உலக உருண்டை போல் மிகவும் அழகாக இருக்கிறது.



அடுத்த ஆக்டிவிட்டிக்கு, உல்லன் நூலை சிறிது சிறிதாக வெட்டி வைத்துக் கொண்டோம். சென்ற ஆக்டிவிட்டியில் காகிதம் பலூனில் ஒட்டியதால், ஒரு பாலித்தீன் கவர் கொண்டு பலூனை சுற்றி விட்டோம். இந்த முறை பசையில் தண்ணீர் கலக்கவில்லை. வெட்டிய நூலை பசையில் நனைத்து, பலூனின் அடி பாகத்தில் ஒட்டினோம். பறவையின் கூடு வடிவத்தில் வருவதற்காக அடி பாகம் மட்டும் ஒட்டினோம்.

காய்ந்தவுடன் பலூனிலிருந்து நன்றாக எடுக்க வந்தது. எங்களிடம் பெவிகால் போன்ற பசை இல்லை. எங்களிடம் இருந்த பசையால் உல்லனை சரியாக ஒட்ட முடியவில்லை. அங்கு அங்கு நூல் பிரிந்து வருகிறது.



ஈஸ்டர் முடிந்தவுடன், பிளாஸ்டிக் முட்டைகள் மிகவும் மலிவாக கிடைத்தன. ஏதாவது செய்யலாம் என்று வாங்கி வைத்திருந்தோம். அதில் ஒன்றை எடுத்து எங்கள் கூடில் வைத்து, வரவேற்பறையில் வைத்திருக்கிறோம். அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது.

2 comments:

  1. பீங்கான் bowl - soup bowl மாதிரி-இன் outer concaveஇல் பேப்பர், இல்லைன்னா wool ஒட்டி கூட நீங்க இந்த மாதிரி செஞ்சிருக்கலாம்.. நான் schoolல படிக்கும்போது, நானும் அம்மாவும் இது மாதிரி பேப்பர் மேஷ் பண்ணி இருக்கம். அம்மா எனக்காக கோதுமை மாவில் கோந்து பண்ணி கொடுத்தாங்க.

    உங்க பதிவுகளில் இருந்து நீங்க அமெரிக்காவில் எங்க இருக்கீங்கன்னு தெரியலை.. இந்தப் பக்கம், கலிபோர்னியாவில் இருந்தீங்கன்னா, Michaelsனு ஒரு கடை இருக்கு. இங்க குழந்தைங்களுக்கான activities சம்பந்தப்பட்ட raw materials நிறைய கிடைக்கும். மற்ற ஊர்களிலும் இந்தக் கடை இருக்குன்னு நினைக்கிறேன், ஆனா சரியா தெரியலை.. அவங்க சைட் michaels.com - இங்க நீங்க பார்க்கலாம்..

    ReplyDelete
  2. நன்றி பொன்ஸ். நாங்க கலிபோர்னியாவில தான் இருக்கோம். Michaels தான் எங்க பேவரைட் ஆர்ட் & ஃக்ராப்ட் shop. அவுங்க 50% sale coupon எடுத்திட்டு தான் போவோம் :-))

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost