மிகப் பிரபலமான விளையாட்டான டிக் டாக் டோ(Tic Tac Toe) விளையாண்டோம். எப்பொழுதும் போல் விளையாடாமல் எண்கள் வைத்து விளையாடி கணிதம் கற்க பயன்படுத்தினோம். இருவர் விளையாடும் இவ்விளையாட்டில், நாம் ஒரு row அல்லது column அல்லது diagonal லில் கூட்டுத்தொகை 15 வரும் படி செய்து வெற்றி பெற வேண்டும். மற்றவர் பெற்ற பெற விடாமல் தடுத்து எண்கள் வைக்க வேண்டும்.
விதிமுறை :
1. 0 முதல் 9 வரை எண்கள் மட்டும் உபயோகப்படுத்த வேண்டும்.
2. 3 *3 கட்டங்கள் உபயோகப்படுத்த வேண்டும்.
3. ஒருவர் ஒற்றைப்படை எண்களான (Odd Number ) 1, 3, 5, 7, 9 மட்டும் உபயோகப்படுத்த வேண்டும்.
4. மற்றொருவர் இரட்டைப்படை எண்களான (Even Number ) 0, 2, 4, 6, 8 மட்டும் உபயோகப்படுத்த வேண்டும்.
5. ஒருவர் ஒரு எண்ணை ஒரு முறை தான் உபயோகப்படுத்த முடியும்.
6. ஒருவர் மாற்றி ஒருவர் எண்கள் வைத்துக் கொண்டே வர வேண்டும்.
7. வெற்றி பெற கூட்டுத் தொகை 15 உருவாக்க வேண்டும்.நாம் வைக்கும் எண்ணால் row அல்லது column அல்லது diagonal லில்கூட்டுத்தொகை 15 வந்தால் நாம் வெற்றி பெறுவோம்.
8. எண்ணைத் தேர்ந்தெடுக்கும் முன் நம்மால் வெற்றி பெற முடியுமா என்று பார்க்க வேண்டும். முடியவில்லை என்றால் எதிராளி வெற்றி பெறும் வாய்ப்பைத் தடுக்க வேண்டும். அதுவும் இல்லையென்றால் அடுத்த முறை வெற்றி பெற வாய்ப்புள்ள எண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
விதிமுறை ஐந்து தான் மிகவும் முக்கியமானது. அது தான் விளையாட்டை சுவாரஸ்யமாக வைத்தது. எளிதான விதிமுறைகள். ஒரு எண் வைக்கும் முன் ஏற்கெனவே இருக்கும் எண்களைக் கூட்டி, பதினைந்திலிருந்து கழித்து என்று குழந்தைக்குச் சற்று கடினம் தான். ஆனால் அந்தக் கடினம் தான் ஆர்வத்தைத் தக்க வைத்தது.
மூன்று முதல் ஐந்து நிமிடத்திற்குள் விளையாட்டு முடிந்துவிடுவதால், அடிக்கடி விளையாட முடிகிறது. நீங்கள் குழந்தைகளுடன் விளையாடும் கணித விளையாட்டுகளையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்..

டிக் டாக் டோ - கடினம் தான் ஆர்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்...
ReplyDeleteமேலும் ஆர்வத்துடன்...
நன்றி தனபாலன்..
DeleteTic Tac Toe-வுடன் மேஜிக்கல் ஸ்கொயரையும் சேர்த்து விளையாடுவது போல் உள்ளது. அருமை!
ReplyDeleteஆமாம் ஸ்ரீதர்..இரண்டும் இணைந்தது தான். நன்றி வருகைக்கு..
Deleteநல்ல விளையாட்டு..விளையாடிப் பார்க்கிறேன். :)
ReplyDeleteவிளையாண்டு பாரு கிரேஸ்..நன்றி
Deletebrainiac 15sச் ந்னு ஒரு கார்ட் கேம் கொஞ்சகாலம் ரொம்ப பேமசா இருந்துச்சு,பப்புக்கிட்டே. இதைவிட்டா, பழங்கால டைப் விடுகதைகள்தான்....மத்தபடி, கணித விளையாட்டுகள்னு தனியா விளையாடினதில்லை. ஆனா, இரெண்டு புத்தகங்கள் ரொம்ப உபயோகமா இருந்துச்சு...மேத்ஸ் வித் மம்மி, யுரேகாவோட கணித புதிர் புத்தகம்(கணித கனிக்கள்?).அதுல இருந்த ஆக்டிவிட்டீஸ் எல்லாமே ஆர்வத்தோட செய்ற மாதிரி இருந்தது. அதுமாதிரி இன்ட்ரஸ்டிங்கான புத்தகங்களை தேடிக்கிட்டிருக்கேன்.
ReplyDeleteஅதைவிட்டா, எப்போவும் பல்லாங்குழியும், ஸ்னேக்ஸ் அன்ட் லேடர்ஸும்தான், ஒத்தையா ரெட்டையாவும்தான்! :-))
நீங்கள் கூறும் இரு புத்தகங்களையும் நான் படித்ததில்லை முல்லை.. படிக்க வேண்டுமென்ற ஆவல் தோன்றுகிறது. கணக்குகளாக எழுதி பண்ணு என்று அவளைத் தோணத்துவதற்கு, இவ்வாறு விளையாடுவது எனக்கு எளிதாக இருக்கிறது. பல்லாங்குழியும் ஒத்தா இரட்டையாவும் எப்பொழுதும் எங்கள் Favorite முல்லை. ஆனால் இப்பொழுது சமி எல்லாவற்றையும் வாயில் வைப்பதால், சோழி வைத்து விளையாட முடிவதில்லை.
ReplyDeleteநல்ல விளையாட்டு தான்....
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி தியானா..
மிக்க நன்றி வெங்கட்..
Delete