கடந்த வார வியாழன் அமெரிக்கச் சுதந்திர தினம். என் கணவருக்கு வியாழன் மற்றும் வெள்ளி விடுமுறை. திங்கள், செவ்வாய் மற்றும் புதன் விடுப்பு எடுத்துக் கொண்டு கடந்த வாரம் முழுவதும், நீண்ட நாட்களாக யோசித்துக் கொண்டே இருந்த பயணத்தை திடீரென்று முடிவு செய்து மேற்கொண்டோம். சென்ற இடங்கள் டிஸ்னி லாண்ட் (Disney land) மற்றும் சான் டியாகோ. பயந்து விடாதீர்கள், இது பயணக் கட்டுரை அல்ல. பயணத்திற்கு முன்னும் பின்னும் செய்தவைகள் பற்றிய விவரங்கள். இதுக்குப் பயணக் கட்டுரையே பரவாயில்லை என்று நினைத்து இருப்பீர்கள் :))
டிஸ்னி லாண்டில் அனைத்து இளவரசிகளிடமும் (வேடமிட்டவர்கள் தான்) கையெழுத்து வாங்குவோர் உண்டு. பெதுவாக நான் இது போல் விஷயங்களைப் பெரிதுப்படுத்துவது இல்லை. ஆனால் ஆட்டோகிராப் புக் டிஸ்னி லாண்ட் உள்ளே 25 டாலர் என்று கேள்விப்பட்டதும், இது பெரிய விஷயமாகத் தோன்றியது. அனைவரும் வாங்கும் பொழுது, தீஷுவும் கேட்பாள் என்று தெரியும். அதற்காக 25 டாலர் என்பது too much. வீட்டிலேயே ஆட்டோகிராப் புக் செய்ய முயற்சி செய்யலாம் என்று தோன்றியது.
ஆட்டோகிராப் புக் போன்று ஒரு புத்தகம் கடையில் 50 சென்ட்டுக்கு கிடைத்தது. போட்டோ ஷாப்பில் குழந்தைகளின் படங்கள் மற்றும் பெயர்கள் போட்டு முதல் பக்கத்தை உருவாக்கினேன். ஒரு டாலருக்கு படங்கள் வாங்கி ஒட்டிவிட்டோம். இரண்டு பேருக்கும் சேர்த்து இரண்டு டாலர்கள் மட்டுமே செலவானது. தனித்தன்மையான புத்தகம் ரெடி.
சென்ற அனைத்து இடங்களிலும் பார்க்கிங் டிக்கெட், Map போன்றவற்றை பத்திரப்படுத்தினோம். வந்தவுடன் ஒரு நோட்டில் எங்கள் புகைப்படங்கள், நாங்கள் எடுத்த டிக்கெட் முதல் பத்திரப்படுத்திய அனைத்தையும் ஒட்டி விட்டோம். ஒரு நினைவு பொருள் ரெடி. தீஷு ஒரு பயணக் கட்டுரை எழுதியிருக்கிறாள். அதையும் இணைக்க முடிவு செய்துள்ளேன். செலவு அதிகமில்லாமல் எங்கள் பயணத்தை டாக்குமென்ட் செய்ததில் எனக்கு மகிழ்ச்சி. Nothing fancy but..

புத்திசாலிக் குழந்தைக்கு புத்திசாலிப் பெற்றோர் அமைவது ஆச்சரியம் இல்லையே!
ReplyDeleteநன்றி Chellappa :-))
Deleteஉங்களை மாதிரி உள்ள புத்திசாலிகளை இந்திய பிரதமருக்கு உதவியாளராக போட்டால் அவர் போகும் ஒவ்வொரு வெளிநாடு டிரிப்பிலும் அதிக அளவு சேமித்து இந்தியா நாட்டை வளமிக்க நாடாக ஆக்கிவிடலாம்.
ReplyDeleteநன்றி மதுரைத்தமிழன். பிரதமருக்கு உதவியாளராக போகலாம் தான். ஆனால் என்னால் பேசாமல் தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் கூட இருக்க முடியாதே. :)))
Delete//பயந்து விடாதீர்கள், இது பயணக் கட்டுரை அல்ல.//
ReplyDeleteஅடடா, பயணக் கட்டுரை உங்களுக்குப் பிடிக்காதா?
நீங்களே தயாரித்த ஆட்டோக்ராஃப் புத்தகம் நன்று. கல்லூரி முடியும் தருவாயில், நாங்கள் எல்லோரும் அந்த வருடத்தின் டைரியில் [புதுசுதாங்க!] எழுதுபவரின் பிறந்த நாள் இருக்கும் பக்கத்தில் எழுதி வாங்கிக்கொண்டோம். வாழ்த்துகள் அனுப்ப வசதியாக இருக்குமென.....
பயணக் கட்டுரைகள் எனக்குப் பிடிக்கும் வெங்கட். ஆனால் அதை சுவாரஸ்யமாக நீங்கள் எழுதுவது போல் என்னால் எழுத முடியாது. அதனால் தான் அப்படி சொன்னேன். நன்றி உங்கள் வருகைக்கு..
Deleteசெலவு அதிகமில்லாமல் எங்கள் பயணத்தை டாக்குமென்ட் செய்ததில் எனக்கு மகிழ்ச்சி
ReplyDeleteபகிர்ந்துகொண்டதற்கு மகிழ்ச்சி நிறைந்த பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!
நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா..
DeleteWow.. What a creative way to do.. Loved it !
ReplyDeleteநல்ல பயனுள்ள பிள்ளைகளுக்கு நல்ல பழக்கத்தையும் ஏற்படுத்தக் கூடிய ஐடியா.பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி தியானா.
ReplyDeleteநம் குட்டீஸ்களுக்கும் இதனை செயல்படுத்த ஆவலாய் இருக்கிறேன்.