Wednesday, June 12, 2013

ந‌டைபாதை ஓவிய‌ம்

போன‌ வ‌ருட‌க் கோடை விடுமுறையின் பொழுது, தீஷுவின் வகுப்பிலுள்ள‌ குழ‌ந்தைக‌ள் ம‌ற்றும் பெற்றோர் ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒவ்வொரு பார்க்கில் சந்தித்து வ‌ந்த‌ன‌ர். முடிந்த‌வ‌ர்க‌ள் போக‌லாம். குழந்தைகளைப் பார்க்கில் விளையாட விட்டு பெற்றோர் பேசிக் கொண்டிருப்பர். ஒரு திங்க‌ள் எங்க‌ள் வீட்டின் அருகிலிருந்த‌ பார்க்கில்  காலை ப‌த்திலிருந்து ப‌ணிரெண்டு வ‌ரை ச‌ந்திப்பு. ச‌ம்மு பச்சிள‌ம் குழ‌ந்தை. தூங்க‌ வைத்து விட்டு சென்றால், அவ‌ள் எழுந்து விட்டாள் என் அம்மா போன் செய்தால் 5 நிமிட‌ங்களில் வ‌ந்து விட‌லாம் என்று முடிவு செய்தேன். ச‌ரியாக‌, ப‌த்து ம‌ணிக்குக் கிள‌ம்பி, வீட்டிலிருந்து வெளியேறப் போகிறோம், ச‌ம்மு விழித்து அழ‌த் தொடங்கினாள். அவள் மீண்டும் தூங்கும் பொழுது ம‌ணி ப‌ணிரெண்டு. எல்லாரும் போயிருப்பாங்க‌ என்றாள் தீஷு அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு. யாரும் இல்லாவிட்டால் ப‌ரவாயில்லை, நாம் இருவ‌ரும் விளையாடுவோம் என்று தீஷுவை அழைத்துக் கொண்டு கிள‌ம்பினேன். கொளுத்தும் வெயிலில் அவ‌ளால் விளையாட‌ முடியாது என்று தோன்றிய‌து.சோள‌ மாவு, க‌ல‌ரிங், பெயிண்ட் பிர‌ஸ் , த‌ண்ணீர், சில காலி பாட்டில்கள் எடுத்துக் கொண்டேன்.

எதிர்பார்த்த‌து போல் வெயிலில் அவ‌ளால் விளையாட முடிய‌வில்லை. ‍சோள‌ மாவைத் த‌ண்ணீரில் க‌ரைத்து, க‌ல‌ரிங் சேர்த்து (பால் போன்ற பதத்தில்), சிமெண்ட் த‌ரையில் வ‌ரைய‌ச் செய்தேன். த‌ண்ணீர் ஃப‌வுண்ட‌ன் அருகிலுள்ள த‌ரையைத் தேர்ந்தெடுத்தோம். சுத்த‌ம் செய்வ‌தும் எளிதாக இருந்த‌து. த‌ண்ணீரை ஊற்றி விட்டால் போதுமான‌தாக இருந்த‌து. என‌க்குச் சோள‌ மாவு த‌ண்ணீரில் போய்விடும் என்று தெரியும் ஆனால் க‌ல‌ரிங் த‌ரையில் க‌ரையாக்கி விடுமோ என்று பய‌ம் இருந்த‌தால், முத‌லில் ஒரு சிறு ப‌குதியில் வ‌ரைந்து, த‌ண்ணீர் ஊற்றி அழித்துப் பார்த்தோம். இட‌ம் ப‌ளிச்சென்று ஆன‌தால் தொட‌ர்ந்தோம்.





எப்பொழுதும் போல் தாளில் சிறிய இடத்தில் வரைவதற்கு பதில், ஒரு எல்லையற்ற பெரிய இடத்தில் வரைந்ததில் தீஷுவிற்கு மகிழ்ச்சி. பள்ளி திறந்தவுடன், கோடையில் செய்த பிடித்தமான நிகழ்ச்சியைப் பற்றி எழுதும் பொழுது, இதைத் தான் எழுதியிருந்தாள். 

மொட்டை மாடி அல்ல‌து ந‌டைப்பாதைக‌ளில் பெயிண்ட் செய்து விளையாட விரும்பினால், சோள மாவில் தண்ணீர் கலந்து  முய‌ற்சிக்க‌லாம‌. கலரிங் சேர்ப்பதாக இருந்தால், முதலில் சிறு ப‌குதியில் வரைந்து  கரையாக்குகிறதா என்று பார்த்து விட்டுத் தொட‌ருங்க‌ள். ‌



10 comments:

  1. வீட்டில் செய்தவற்றை விட தீஷுவிற்கு வெளியில் செய்தது மனம் கவர்ந்து விட்டது... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. போன வருடம் வரைய விட்டேன் தியானா , இந்த வருடம் எங்கள் குடியிருப்பில் எங்கும் வரையக்கூடாது என்று விதிமுறை... :( நீ செய்தது போல வெளியில் தான் முயற்சிக்க வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. குடியிருப்பில் விதிகளை மாற்றிக் கொண்டே இருப்பது புதிது இல்லையே கிரேஸ்..நன்றி உன் வருகைக்கு..

      Delete
  3. / ஒரு எல்லையற்ற பெரிய இடத்தில் வரைந்ததில் தீஷுவிற்கு மகிழ்ச்சி. /

    நிச்சயமாக. மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராமலக்ஷ்மி மேடம்..

      Delete
  4. வெளியிடங்களில் இந்த மாதிரி வரைய அனுமதி உண்டா? அல்லது முன்கூட்டியே அனுமதி வாங்க வேண்டுமா?
    குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஒரு சுதந்திரம் கொடுப்பது அவர்களது திறமையை வெளிக் கொண்டுவர உதவும்.
    பாராட்டுகள்!

    ReplyDelete
    Replies
    1. நாம் சுத்தம் செய்து விட்டால் பிரச்சனை இல்லை அம்மா.. நாங்கள் தரையை சுத்தம் செய்துவிட்டு வந்தோம். நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்..

      Delete

  5. நல்ல ஐடியா தியானா!
    ஓவியம் அழகா வந்திருக்கு! ஓவியர் ரொம்ப டெடிகேஷனா வரையறார் போலிருக்கே! :‍))

    ReplyDelete
    Replies
    1. ஓவியரை இந்த விஷயத்தில் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். அவருக்கு ஓவியம் பிடிக்கும் என்பதால் ஆர்வத்துடன் வரைவது வழக்கம்..

      Delete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost