அறிவியல் கண்காட்சியில் ஜெயன்ட் பபிள்ஸ் (Giant Bubbles) என்று இரண்டு கட்டைகளில் இரு கயிறுகள் கட்டி அதன் நடுவில் மிகப் பெரிய பபிள்ஸ் வருவது போல் செய்திருந்தனர். அதை வீட்டில் செய்யலாம் என்று முயற்சித்தோம். மேலும் எப்பொழுதும் போல் ஸ்ட்ரா அல்லது குச்சி வைத்து ஊதாமல், வேறு சில ஊதுவான்களும் முயற்சித்தோம்.
எங்களிடம் கட்டைகள் இல்லை. இரண்டு கரண்டிகளை எடுத்துக் கொண்டோம். அவற்றை உல்லன் நூல் கொண்டும் இணைத்துக் கொண்டோம். நூலின் இடைவெளியில் பபிள்ஸ் வரும் என்பது ஐடியா. மேலும் ஒரு பிளாஸ்டிங் மூடியின் நடுப்பகுதியில் ஒரு வட்டம் வெட்டி எடுத்து ஒரு ஊதுவானும், ஒரு சதுர டப்பாவில் ஒரு சதுர பகுதையை வெட்டி எடுத்து ஒரு சதுர ஊதுவானும் தயாரித்துக் கொண்டோம். சதுர துளை வழியாக வரும் பபிள்ஸ் எந்த வடிவத்தில் இருக்கும் என்று காண ஆசை :-)).
சோப்புக் கலவை நாங்கள் முன்னமே வீட்டில் செய்திருக்கிறோம். இப்பொழுது கிளிசரின் இல்லாததால் வெறும் பத்திரம் துலக்கும் சோப்பும் (Dish washing liquid) தண்ணீரும் கலந்து சோப்புக் கலவை செய்தோம். சோப்பு கலவையை ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துக் கொண்டோம். நூலுடன் கரண்டியை கலவையில் வைத்து, வெளியில் எடுத்து, கரண்டியை மெதுவாக எதிர்புறத்தில் இழுத்து நூலைப் பிரிக்கவும். நூலுக்கு நடுவில் சோப்பு மெல்லிய இழையாகத் தெரியும். அதன் மேல் ஊதவேண்டும். நாங்கள் உல்லன் பயன்படுத்தியதால் நூலைப் பிரிப்பதற்காக எளிதாக இல்லை. சணல் பயன்படுத்தி இருந்தால் எளிதாக இருந்திருக்கும்.
மிகப் பெரிய பபிள்ஸ் வரவில்லை. ஆனால் பெரியது வந்தது.
உல்லன் ஒட்டிக் கொண்டதால் நூலைப் பிரிக்க முடியாததால் வெறும் சிறு இடைவெளியே கிடைத்த்து
மீண்டும் கலவையில் விழுந்த ஒரு பபிள்ஸ்
சதுர துளை வழியாகவும் வட்டமே வரும்
எதிர்பார்த்தது போல் வராவிட்டாலும் நல்லவொரு முயற்சியாக அமைந்தது.
nice post.
ReplyDeleteதங்களுடைய பதிவுகள் மிகவும் அருமை. தமிழ்வெளி, தமிழ்மணம், இண்ட்லி போன்ற பிரபல “திரட்டி”களில் தங்கள் பதிவினை இணைத்தால், பல பெற்றோர்களும், மழலையர்களும் பயன் பெறுவர். என்னுடைய வலைப்புவில் இடது புறத்தினில் “வலைப்பூந்தோட்ட” பகுதியில் திரட்டிகளின் சின்னங்களுடன் கூடிய இணைப்பினை அளித்துள்ளேன். அவசியம் வருகை தந்து பிடித்திருப்பின் பயன்படுத்திக்கொள்ளவும்.
ReplyDeleteThanks Geetha
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மூர்த்தி. நான் தமிழ்மணத்தில் இணைக்கிறேன். இண்ட்லியில் எப்பொழுதாவது இணைக்கும் வழக்கும் உண்டு. மற்ற திரட்டிகளையும் முயற்சி செய்கிறேன்.