இந்த முறை எங்கள் ஓவியர் & ஓவியம் வாசிப்பிற்கு நாங்கள் எடுத்துக் கொண்டது ஜேம்ஸ் விஷ்ட்லரின் (James Whistler) த ஃபாலிங் ராக்கெட் ஓவியம் (The falling rocket). அமெரிக்காவில் பிறந்த இவர், ஒருவர் இவரின் ஓவியத்தை இகழ்ந்ததால் அவர் மேல் கோர்ட்டில் கேஸ் போட்டு அனைத்து சொத்தையும் இழந்தவர். இவரின் முழு விவரம் இங்கே காணலாம்.
ஓவியம் இருட்டில் ஒரு மாத்தாப்பு வெடிப்பது போல் இருந்தது. நாங்கள் பின்பற்றிய வழிமுறை:
1. காகித்தை இரண்டாக பிரித்துக் கொண்டோம். கீழ் பகுதி சிறியதாக இருக்க வேண்டும். அந்த பகுதி தண்ணீர் பகுதி
2. பாத்திரம் துலக்க பயண்படும் ஸ்பான்ச்சால் ஒரு சில இடங்களில் சிவப்பு, ஆரென்ச் பெயிண்ட் கொண்டு ஒற்றி எடுக்கவும். இது மாத்தாப்பு வெடிக்கும் பொழுது வரும் எபெக்ட்டுக்காக.
3. பேப்பர் இருக்கும் அதே கலர் பெயிண்ட் எடுத்துக் கொள்ளவும். ஸ்பான்ச்சால் பெயிண்டில் தேய்த்து, கோட்டிற்கு மேல் பகுதியில் கட்டிடங்கள் போல் சதுரமாக வரைய வேண்டும். கீழ் பகுதியிலும் அதே பேல் செய்ய வேண்டும். கீழ் பகுதி மேலுள்ள கட்டிடங்களின் பிரதிபலிப்பு.
4. ஒரு பஞ்சில் வெள்ளை பெயிண்ட்டை எடுத்து மேல் பகுதியில் புகை போல் வரைய வேண்டும்
5. அதன் மேல் பல் துலக்க பயன்படும் பிரசைக் கொண்டு சிவப்பு மற்றும் ஆரெஞ்ச் பெயிண்ட ஸ்பெரே செய்து விடவும்.
எங்களின் ஓவியம்
Games to play with 3 year old without anything
2 years ago
wow nice :-)
ReplyDelete