டச் ஓவியரான வான் கோ (Vincent Van gogh) பற்றிப் படித்தோம். இவர் பல்வேறு வேலைகளில் தோல்வி கண்டு, பின் ஓவியர் ஆனவர். மன நோயால் பதிக்கப்பட்டிருந்த இவர் தற்கொலை செய்து கொள்ளும் முன் ஒரே ஒரு ஓவியம் மட்டுமே விற்றுயிருந்தார். இன்று இவரின் ஒவ்வொரு ஓவியத்தின் விலையும் கோடிகளில்.
இவரின் ஸ்டாரி நைட் (Starry Night) என்ற ஓவியத்தை எடுத்துப் படித்தோம்.
1. முதலில் பெயிண்ட்டில் சிறிது கோந்து கலந்து கொள்ள வேண்டும்.
2. பக்கதை மூன்றாக பிரித்து(நேர் கோடாக போடாமல்), நடு பகுதியில் சிறு சிறு மரங்கள் வரைந்து கொள்ளவும். மேல் பகுதியில் சுருள் சுருளாக மேகங்கள் வரைந்து கொள்ளவும்.
3. மேல் பகுதியில் வெள்ளை, ஊதா கொண்டு வான/மேகம் வரையவும்
4. வரைந்த பெயிண்டின் மேல் போர்க்(fork) கொண்டு மேலும் சுற்றி விடவும்.
5. கீழ் பகுதியிலுள்ள மரங்களுக்கு, பச்சையும் ப்ரவுணும் தீட்டவும். ப்ரஸின் பின் பகுதியைக் கொண்டு பச்சை பெயிண்ட்டை சுற்றிவிடவும்.
நடு பகுதியில் மீதியுள்ள இடங்களில் மஞ்சளும் ஆரெஞ்சும் தீட்டவும்.
6. கீழ் பகுதியில் பச்சை தீட்டி, போர்க் கொண்டு நீளவாக்கில் இழுக்கவும்
தீஷுவின் படம்.
Games to play with 3 year old without anything
2 years ago
அன்பின் தியானா - தீஷுவின் படம் அருமை - பொறுமையாக வரைந்தமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteநன்றி சீனா அய்யா..
ReplyDelete