ஒரு தாளில் 1 முதல் 12 வரை எழுதிக் கொள்ள வேண்டும். விளையாடும் அனைவருக்கும் தனித்தனி பேப்பர். அதே போல் தனித்தனியாக 12 காய்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு தாயக் கட்டையை உருட்ட வேண்டும். நம் காயை எடுத்து தாயக்கட்டைகளில் விழுந்த கூட்டுத்தொகையை நம் காகித்தில் அதே எண்ணின் மேல் வைக்கலாம் அல்லது எந்த எந்த எண்களை கூட்டினால் அந்த எண் வருமோ, அதன் மேலும் வைக்கலாம். உதாரணத்திற்கு நாம் உருட்டிய எண் 9 என்றால், 9 எண் மீது காய் வைக்கலாம், அல்லது 1 மேல் ஒரு காயும் 8 மேல் ஒரு காயும் வைக்கலாம் ( 1+8 = 9 என்பதால்), அல்லது 1 மேல் ஒரு காய் + 5 மேல் ஒரு காய் + 3 மேல் ஒரு காய் இப்படியாக. ஒரு எண்ணின் மேல் ஏற்கெனவே காய் இருந்தால் அதன் மேல் மீண்டும் வைக்கக் கூடாது. நாம் உருட்டிய எண்ணை வைக்க முடியாவிட்டால், நாம் விளையாட்டிலிருந்து நீங்கி விட வேண்டும். எத்தணை எண்கள் விடுபட்டுள்ளதோ, அது நம் ஸ்கோர். குறைந்த ஸ்கோர் எடுத்தவர் வெற்றி பெறுவர். ஆகையால் ஒரு எண்ணை எவ்வளவு பிரிக்க முடியுமா அந்த அளவு பிரித்து அதிக எண்களின் மேல் காய்கள் வைப்பதால் ஸ்கோர் குறையும். இந்த விளையாட்டின் மூலம் பல எண்களைக் கூட்ட எளிதாக பழகிக் கொள்வர்.
ஐடியா Family Math புத்தகத்தில் எடுத்தது. ஆனால் நான் சற்று மாற்றியிருக்கிறேன்.
Games to play with 3 year old without anything
2 years ago
அந்த பதிவு போட்ட அதே நாளில் தான் Template மாற்றினேன் ... உங்கள் கமெண்ட் பார்த்ததும் தான் உங்கள் ப்ளாக் பார்த்தேன் .. same pinch ...
ReplyDeleteமித்ராவிற்கு நிறைய activities உங்கள் ப்ளாக் இல் இருந்து தான் பார்த்து செய்கிறேன் . மிக்க நன்றி. தீக்ஷு வை கேட்டதாக சொல்லவும்
அட, இது நல்லா இருக்கே! வளைகுடாவில் வசிப்பவர்களுக்கு இது கோடைவிடுமுறை. இது போன்ற விளையாட்டுக்களால் கணிதத்தையும் கற்பிப்பது போன்று இருக்கும்.
ReplyDeleteகண்டிப்பாக சொல்லுகிறேன் மித்ரா அம்மா.
ReplyDeleteநன்றி மூர்த்தி