இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்று எங்கள் பாட்டி அடிக்கடி கூறிக் கேட்டியிருக்கிறேன். சமீபத்தில் நன்றாக உணர்ந்தேன்.
நான் தற்பொழுது வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகம் Knowing and teaching elementary Mathematics . அதில் சீன ஆசிரியர்களும் அமெரிக்க ஆசிரியர்களும் எவ்வாறு அடிப்படை கணிதத்தைப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்ற கருத்துக் கணிப்பும் சீன ஆசிரியர்களின் புரிதல் சீன மாணவர்கள் கணிதத்தில் சிறிந்து விளங்க ஒரு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதில் சீன மொழியில் 11 றை ஒரு பத்து ஒன்று, 12 டை ஒரு பத்து இரண்டு என்றும் 20 தை இரு பத்து, 30 தை மூன்று பத்து என்று கூறுவர் என்று இருந்தது. அதனால் 11 யில் ஒரு பத்தும் ஒன்றும் இருப்பது தெரிந்ததால் கடன் வாங்கி கழித்தல் முதலியன எளிதாக இருக்கின்றது என்றும் இருந்தது. இது எளிதாயிருக்கே என்று நானும் எண்களை கூறி இந்த முறையில் பதில் சொல்லச் சொன்னேன். உதாரணத்திற்கு 21 என்றால் இரு பத்து ஒன்று என்று சொல்ல வேண்டும்.
அதை என் கணவரிடம் சொல்லும் பொழுது எண்களை தமிழில் சொன்னேன். இருபதை இரு பத்து என்று சொல்ல வேண்டும் என்றேன். அப்பொழுது தான் எனக்கு புரிந்தது. தமிழிலும் அவ்வாறே தான் சொல்லுகிறோம். பதினொன்று (ஒரு பத்து ஒன்று) என்று சொல்லும் பொழுதே அதில் ஒரு பத்தும் ஒன்றும் இருக்கிறது என்று வெளிப்படையாகத் தெரிகிறது. தமிழில் சொல்லும் பொழுது அதன் புரிதல் இல்லை. சீனாவில் சொல்கிறார்கள் என்றதும் அது மேன்மையாக தெரிகிறது.
முழு பல்பு எனக்கு..
Games to play with 3 year old without anything
2 years ago
No comments:
Post a Comment