ஒரு பாத்திரத்தில் அரை பாத்திரம் அளவில் தண்ணீர் நிரப்பி, அதில் சிறு பொருட்களைப் போட்டு உறைய வைத்து விட வேண்டும். அது உறைந்தவுடன், மேலும் சிறு தண்ணீர் விட்டு அதில் சிறு பொருட்கள் போட்டு உறைய வைக்க வேண்டும். நான் இரண்டாவது முறை தண்ணீர் ஊற்றும் பொழுது சிறிது கலரிங் சேர்த்துக் கொண்டேன்.
ஐஸ் கட்டியிலிருந்து பொருட்களை எடுக்க வேண்டும். பொருட்களை எடுக்க இடுக்கி, Screw driver போன்றன கொடுத்தேன். தீஷு விருப்பமாக விளையாண்டாள். கலர் பகுதியில் இருந்த ஐஸ் மீது பேப்பர் தடவி கலரிங் செய்தாள். பொருட்களை எடுத்தப்பின் இருந்த கலர் தண்ணீரில் சூப் செய்து எங்களுக்கு பரிமாறினாள். குழந்தைகளுக்கு கண்டிப்பாக ஒரு விருப்பமான விளையாட்டாக இருக்கும்.
அழகாய் இருக்கிறது ஐஸ் கட்டிப் புதையல்:)!
ReplyDeleteinteresting. I will try
ReplyDeleteநன்றி ராமலக்ஷ்மி மேடம்..
ReplyDeleteமுயற்சித்துப் பாருங்கள் அமுதா. நன்றி உங்கள் வருகைக்கு