மருந்து கொடுக்க பயன்படும் dropper மூலம் தண்ணீர் ஒரு கிண்ணதிலிருந்து மற்றொரு கிண்ணத்திற்கு மாற்றும் பயிற்சி
முன்பே செய்திருக்கிறோம். இப்பொழுது சற்று வித்தியாசப்படுத்தி எங்களிடமிருந்த மீன் பொம்மையின் குழி பகுதியில் தண்ணீரை விட வேண்டும். டிராப்பர் மூலம் தண்ணீர் மற்றும் பொழுது எழுத பயன்படும் விரல்களுக்கு வேலை கொடுக்கப்படுகிறது. மேலும் அகலமில்லாத பகுதியில் தண்ணீர் மாற்றும் வேலை கை கண் ஒருங்கிணைப்புக்கும் ஏற்றது.

தீஷு விருப்பமாக செய்தாள். அவளின் ஆர்வத்தைத் தக்க வைக்க சிறிது கலர் கலந்து சிகப்பு கலர் மற்றும் பச்சை கலர் தண்ணீர் கொடுத்தேன். அவள் மீனை நிறைத்தவுடன், அதன் மேல் டிஸ்யூ பேப்பர் போட்டு கலர் தண்ணீரை எடுத்தோம். டைய் (dye effect) போல் அழகாக வந்திருந்தது. பச்சையிலிருத்து பிரிந்திருந்த நீலம் என பார்க்க அழகாக இருந்தது.

ஒரு மாண்டிசோரி பயிற்சியை பெயிண்டிங் ஆக மாற்றியதில் எனக்கு சந்தோஷம்.
நல்ல ஐடியா தியானா. பார்க்க அழகாக இருக்கிறது. தீஷுக்கு வாழ்த்துகள்!
ReplyDeletenice activity Dhiyana..want to do with Alvin...going to find an object similar to the fish..
ReplyDelete