தீஷுவின் வகுப்பில் இரண்டு ஆசிரியைகள் மற்றும் ஒரு உதவியாளர். ஆசிரியர் தினத்திற்கு அவர்கள் அனைவருக்கும் வாழ்த்து அட்டைகள் கொடுத்தோம். எப்பொழுதும் போல் தீஷு செய்ததாக இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். சார்ட் பேப்பரை வெட்டி கொடுத்தேன். முன்பு நான் பெயிண்டிங் கிளாஸ் சென்ற பொழுது சொல்லிக் கொடுத்தது இந்த வரைமுறை.
ஒரு தடிமன் நூலை விரலில் சுற்றிக் கொள்ள வேண்டும்.
சுற்றிய நூலில் வரி வரியாக ஒவ்வொரு கலராக பெயிண்டை தடவ வேண்டும்.
நூலை எடுத்து, சார்ட் பேப்பரில் வைத்து, ஒரு நுனி நம் பக்கத்தில் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். மேல் மற்றுமொரு காகிதம் வைத்து, நுனியை இழுத்தால், நூலிலுள்ள பெயிண்ட் காகிதத்தில் வரைந்து அழகிய டிசைன் உருவாக்கும்.
தீஷு ஒரு வாழ்த்து அட்டை மட்டும் இது போல் செய்தாள். அவளுக்கு படி படியாக எவ்வாறு செய்ய வேண்டும் என்று procedure பின் பற்றுவது பிடிப்பதில்லை. அவளாகவே செய்ய வேண்டும். மற்ற இரு அட்டைகளும் அவள் விருப்பத்திற்கு செய்தாள்.
Games to play with 3 year old without anything
2 years ago
No comments:
Post a Comment