பல ஆக்டிவிட்டீஸுக்குத் தயார் செய்ய எடுத்த நேரத்தை விட தீஷு உபயோகப்படுத்தும் நேரம் கம்மியாக இருக்கும். ஏதாவது பண்ணலாம் என்று அவள் கேட்டவுடன் தோன்றியதைக் கொடுத்தால் தீஷு விருப்பமாக மீண்டும் மீண்டும் விளையாடுவாள். அப்படி ஒன்று தான் இந்த ஆக்டிவிட்டி.
இரு தாள்கள் எடுத்துக் கொண்டேன். ஒரு தாளின் இடையில் ஒரு கோடு வரைந்து, அந்த தாளை இரண்டாகப் பிரித்துக் கொண்டேன். இன்னொரு தாளில் ஒரு முக்கோணம் வரைந்து கொண்டேன்.
Cuisenaire ராடும் எடுத்துக் கொண்டேன்.
Keep number 5 above the line, keep number 3 inside the triangle, keep number 7 on the corner of the triangle என்று நான் சொல்ல சொல்ல தீஷு வைத்துக் கொண்டே வர வேண்டும். இதன் மூலம் above, below, inside, outside, corner, side போன்ற வார்த்தைகள் கற்றுக் கொண்டாள். சிறு குழந்தைகளுக்கு வண்ணம், வடிவம் கற்றுக் கொடுக்கக் கூட இந்த முறையில் முயற்சிக்கலாம்.
No comments:
Post a Comment