தீஷுவின் பள்ளி ஒன்பது மணிக்குத் தான். மற்ற பள்ளிகளை ஒப்பிடும் பொழுது அது எங்களுக்கு வசதியான நேரம். ஆனால் தீஷுவை ரெடி செய்து நாங்கள் வீட்டை விட்டு கிளம்பும் பொழுது ஒன்பது பத்தாகி விடும். தீஷு பள்ளியை அடையும் பொழுது ஒன்பது பதினைந்து. அப்பொழுது தான் எல்லா குழந்தைகளும் வரும் என்றாலும் நேரம் தவறுவது எனக்குப் பிடிக்காத ஒன்று. தினமும் காலை வேளையில் அவள் வேலைகளைச் செய்ய சொல்லி அவள் பின்னால் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். அவள் வேலைகளை நாங்களே சொல்லாமல் அவளே செய்ய பழக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.
அதற்கு நான் பயன்படுத்தியது தான் இந்த ரிவார்ட் ஸிஸ்டம். டாய்லட் உபயோகப்படுத்துவது, பல் துலக்குவது, படிப்பது, குளிப்பது, சாமி கும்பிடுவது, சாப்படுவது, ஜர்கின் போட்டு ரெடியாவது இது தான் தீஷு காலை வேளையில் வரிசையாக செய்ய வேண்டிய செயல்கள். அச்செயல்களின் படங்களை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டேன். கத்தரித்து ஒரு சாட் பேப்பரில் வரிசையாக ஒட்ட வைத்தேன். தினமும் காலையில் நாங்கள் சொல்லாமலே அவளாகவே செய்ய வேண்டும். அப்படி செய்தால் அவளுக்கு ஒரு ஸ்டார். இவ்வாறு 25 ஸ்டார்ஸ் வாங்கியவுடன், அவள் கேட்ட இடத்திற்கு அழைத்துச் செல்கிறோம் என்று சொல்லி இருக்கிறேன்.
கடந்த இரண்டு நாட்களாக செய்கிறோம். தீஷுவும் சந்தோஷமாக செய்கிறாள். இதில் எனக்குப் பூரண விருப்பமில்லை. லஞ்சம் கொடுப்பது போல் முதலில் தோன்றியது. ஆனால் பழக்க வேண்டும். ஒரு முறை பழக்கம் வந்துவிட்டால் அவளை செய்யத் தொடங்கிவிடுவாள் என்று நம்புகிறேன். பார்க்கலாம் எப்படி போகிறது என்று.
Games to play with 3 year old without anything
2 years ago
No comments:
Post a Comment