Monday, February 9, 2009

கண்ணைக் கட்டி

எப்பொழுதும் பண்ணும் பஸில் தான். சற்று வித்தியாசப்படுத்த ஐந்து பஸில் போர்டுகளைக் கொடுத்தேன். பஸில் பீஸை எடுத்து, அதற்கான பஸில் போர்டைக் கண்டுபிடித்து, அதில் வைக்க வேண்டும். சிரமம் இல்லாமல் செய்தாள்.

12 பீஸ் floor puzzle செய்து கொண்டிருந்தாள். இப்பொழுது 25 பீஸ் பஸில் வரை செய்வதற்கு பொறுமை வந்திருக்கிறது.


இதுவும் முன்பு செய்தது தான். ஆனால் இந்த முறை கண்ணை மூடிக் கொண்டு, இருப்பதில் பெரிய பீஸை கண்டுபிடிக்க வேண்டும். சரியாக செய்தாள். கண்ணைத் திறக்காத என்று ஒவ்வொரு முறையும் ஞாபகப்படுத்த வேண்டியிருந்தது.

அதே முறையில் போர்டு பஸிலில் இரண்டு பீஸ்களை மட்டும் எடுத்துக் கொண்டு, கண்ணை மூடிக் கொண்டே பொருத்த சொன்னேன். போர்டில் பீஸ் வைப்பதற்கான இடத்தைப் பார்த்து விட்டு, மீண்டும் கண்னை மூடிக் கொண்டுப் பொருத்தினாள். சிறிது நாட்களுக்கு பிறகு கண்ணை மூடிக் கொண்டே, போர்டில் பொருத்தவும் பழக்க வேண்டும்.

4 comments:

  1. கண்ணைக் கட்டிக் கொண்டு பஸில் செய்வது இப்போதுதான் கேள்விபடுகிறேன்..உக்கார்ந்து யோசிப்பீங்களோ?! :-) Juz joking..
    தீஷுவை ரொம்ப பிசியாக பொருத்துகிறாள்..அட்டைகளில்!
    வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. உக்காந்து யோசிக்காட்டி கஷ்டம் முல்லை. அவளுக்கு விளையாடுவதற்கு ஆள் இல்லாததால், என்னை சும்மா உட்கார விடமாட்டாள். அந்த கொடும்மைக்கு யோசிக்கிறது பரவாயில்லை :-).

    ReplyDelete
  3. நீங்க யோசிக்கிறதைப் பார்த்தால் எனக்கு கண்ணைக் கட்டுது. கலக்கறீங்க.. தீஷு must be enjoying

    ReplyDelete
  4. நன்றி அமுதா. எங்களுக்கு பொழுது போகனும்ல.

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost