Wednesday, February 4, 2009

வருகிறோம்

கடந்த நான்கு ஐந்து வருடங்களாக ஒவ்வொரு முறை இந்தியா வரும் பொழுதும், எங்கள் உறவினர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி "எப்போ திரும்பி வர போகிறீர்கள்?". நாங்களும் ஒவ்வொரு முறையும் அந்த வருட கடைசியில் வந்து விடுவோம் என்போம். கடந்த முறை வந்திருந்த பொழுது, "இனிமேல் எங்க வர போரீங்க" என்று அவர்களே முடிவு செய்து கொண்டார்கள். அப்பொழுது பதில் சொல்லவில்லை. இப்பொழுது திரும்பி வர போகிறோம். இம்மாத கடைசியில் திரும்புகிறோம்.

நாங்கள் இருவரும் லைப்ரேரியை தவிர எதையும் மிஸ் பண்ண மாட்டோம். புத்தகம் எங்கள் இருவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. கிட்டத்தட்ட 20 லைப்ரேரியிலிருந்து ஆன்லைனில் புத்தகங்களை நமது லைப்ரேரிக்கு வரவழைத்துக் கொள்ளலாம். ஆகையால் நமது லைப்ரேரியில் இல்லாத புத்தகங்களையும் படிக்க முடியும். எங்களுக்கு திங்கள் மாலை லைப்ரேரி டைம். ஒவ்வொரு வாரமும் ஏதாவது புத்தகம் எடுத்து வந்து விடுவோம். இதே பழக்கத்தை இந்தியா வந்தவுடன் ஆரம்பிக்க வேண்டும். பக்கத்தில் லைப்ரேரி ஒன்று இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

தீஷுவை பொருத்த வரை அவள் ஸ்கூலையும் மிஸ் பண்ணுவாள் என்று நினைக்கிறேன். நியூஜெர்ஸி வரும் முன் பென்ஸில்வெனியாவில் ஒரு சின்ன ஊரில் இருந்தோம். அப்பொழுது ஒரு பங்களாதேசி ஒருவர் எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருந்தார். அவர் குழந்தை பள்ளிக்கு போனவுடன் ஏன் அவன் தோல் வேற கலராக இருப்பதாக மற்ற குழந்தைகள் கேட்பதாக கூறினான் என்றார்கள். மேலும் Single parent, step father போன்றவைகள் என்ன என்று கேட்டதாக கூறினார்கள். தீஷுவிற்கு ஸ்கூல் தேடும் பொழுது, மிகுந்த cultural difference இருக்க கூடாது என்று நினைத்தோம். அவளுக்கு அதை புரிந்து கொள்ளும் வயது இல்லை என்பது எங்கள் கருத்து. அவள் ஸ்கூல் இந்தியன் ஒருவரால் நடத்தப்படுகிறது. ஆகையால் அங்குள்ள 35 குழந்தைகளில் கிட்டத்தட்ட 30 குழந்தைகள் இந்திய குழந்தைகள். நாங்கள் செய்தது சரியா தவறா என்று தெரியாது. ஆனால் தீஷுவிற்கு வித்தியாசம் தெரியாமல் பழகுவதற்கு வசதியாக இருந்தது. அவளுக்கு பள்ளி என்றால் என்ன என்று பழக்கியதற்கு மிஸ்.கீதா மற்றும் மிஸ்.சீதாவிற்கு என் நன்றிகள். தீஷு இந்தியா வருவதற்கு ஆவலாக இருக்கிறாள். தினமும் காலையில் எழுந்தவுடன் என்னைக்கு போகிறோம் என்று கேட்கிறாள். மாற்றங்களை ஏற்றுக் கொள்வாள் என்று நினைக்கிறேன்.

இப்பொழுது இந்தியா வருவதாக உறவினர்களிடம் சொன்னதற்கு எதுக்கு இப்ப ரிஸஷன் டைம்ல வாரீங்க? Project முடிஞ்சிருச்சா? திரும்பி போக சொல்லிவிட்டார்களா? என்று கேட்கிறார்கள். இவர்களுக்கு என்ன பதில் சொல்ல முடியும்.

12 comments:

 1. can i know the school in nj run by indians.I like to put my son there.

  ReplyDelete
 2. போய் வாரும் நண்பரே! நானும் நியூ ஜெர்ஸிர்தான்

  ReplyDelete
 3. The school is Peachtree Montessori, Parsippany, NJ.

  நன்றி ILA

  ReplyDelete
 4. ஆஹா நேற்றுதான், வெகுநேரம் உங்கள் முதல் ஆங்கிலப்பதிவில் இருந்து வாசித்துக் கொண்டிருந்தேன். மாண்டிசோரி முறை தமிழில் செய்முறை விளக்கங்களுடன், வெகு சிறப்பாக கொடுத்துவருகின்றீர்கள், கண்டிப்பாக எங்களுக்காகவது தொடருங்கள்.

  உங்கள் வருகை/மாற்றம் அதிகசிரமமம் இல்லாமல் நிகழ வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்...
  தீஷீ வயதுக்கு மாற்றம் அதிகம் சிரமம்தரக்கூடாது.

  இப்பொழுது இந்தியா வருவதாக உறவினர்களிடம் சொன்னதற்கு எதுக்கு இப்ப ரிஸஷன் டைம்ல வாரீங்க?
  எப்ப வருவீங்க, எப்ப வருவீங்க‌
  என கேட்ட தந்தையும்
  'வரப்போகிறோம்'
  என்று சொன்னதை ‍ கண்டுகொள்ளாமல்
  "இப்ப நிலைமையில்
  திரும்ப நாளாகுமில்ல!?"
  என்கிறார்!

  அவரவர் கவலை அவரவர்க்கு! அதனால ஒரு பதிலும் தேவையில்லையென்றே படுகிறது:)

  "நாங்கள் இருவரும் லைப்ரேரியை தவிர எதையும் மிஸ் பண்ண மாட்டோம். புத்தகம் எங்கள் இருவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. கிட்டத்தட்ட 20 லைப்ரேரியிலிருந்து ஆன்லைனில் புத்தகங்களை நமது லைப்ரேரிக்கு வரவழைத்துக் கொள்ளலாம். ஆகையால் நமது லைப்ரேரியில் இல்லாத புத்தகங்களையும் படிக்க முடியும். எங்களுக்கு திங்கள் மாலை லைப்ரேரி டைம். ஒவ்வொரு வாரமும் ஏதாவது புத்தகம் எடுத்து வந்து விடுவோம். இதே பழக்கத்தை இந்தியா வந்தவுடன் ஆரம்பிக்க வேண்டும். பக்கத்தில் லைப்ரேரி ஒன்று இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

  ‍எழிலுக்கும், எனக்கும் இருந்த அதே கவலை, விளைவுதான்: BuddiesWorld@Chennai விபரம் விரைவில்:)

  ReplyDelete
 5. வாங்க... வாங்க... எந்த ஊருக்கு வர்றீங்க?

  ReplyDelete
 6. வாங்க வாங்க

  இந்தியா வந்த பின்னாடி தீஷீ அப்டேட்ஸ் இருக்குமா.

  இல்ல ஒரு மாதம் லீவா.


  எதுக்கு இப்ப ரிஸஷன் டைம்ல வாரீங்க?
  என்ன கொடுமை சரவணன் சார்

  ReplyDelete
 7. வெல்கம்...
  வாங்க வாங்க. வெய்ட் பண்றோம்...

  ReplyDelete
 8. முதல் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி துளசி மேடம்.

  BuddiesWorld@Chennai பற்றி சொல்லுங்க அன்பு. அவசியம் தேவைப்படும்.

  பெங்களூருக்கு வருகிறோம் அமுதா.

  ReplyDelete
 9. வாங்க அமித்து அம்மா. இந்தியா வந்தவுடன் தீஷுவிற்கு ஸ்கூலில் அட்மிஷன் வாங்க வேண்டும். வாங்கியவுடன் மதுரை போக வேண்டும். அதற்கு அப்புறம் net connection வரும் வரைக்கும் லீவு.

  நன்றி நிலா

  ReplyDelete
 10. பெங்களூர் என்றால் ஹிப்போ கேம்பஸ் கேள்விப்பட்டிருக்கிறேன், வேறென்ன நூலகம் இருக்கிறது தெரியவில்லை...
  மற்றப்படி இந்தியாவைப் பொருத்தவரை "பொதுநூலகம்" அதுவும் குழந்தைகளுக்கென வெகு சொற்பம்/அல்லது இல்லவே இல்லை என்ற நிலைதான்.

  BuddiesWorld@Chennai இப்போதைக்கு ஆரம்பகட்ட நிலையில்தான் இருக்கிறது, இன்னும் சிலமாதங்கள்/இந்த வருடத்துக்குள் தயாராகும்.

  உங்கள் மின்னஞ்சல் இங்கு இல்லாததால்
  ஒரு ஹாய் அனுப்புங்கள்

  தொடர்புகொள்கிறேன்...

  ReplyDelete
 11. அன்பு,

  தங்களுக்கு இரண்டு முறை (ஒன்று gmail, ஒன்று yahoo) mail அனுப்பினேன். இரண்டும் முகவரி தவறு என திரும்பி வந்து விட்டன. என் முகவரி dheekshu@gmail.com.

  ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost