Friday, February 13, 2009

பெயரை எழுத வா

சென்ற முறை அவள் டீச்சரைப் பார்த்தப் பொழுது, தீஷு ஆங்கில எழுத்திக்களை எழுதுவதால், அவள் பெயரை எழுதப் பழக்கச் சொன்னார்கள். அவள் பெயரிலுள்ள 11 எழுத்துக்களை மனப்பாடம் செய்ய வைக்க எனக்கு விரும்பமிருக்கவில்லை. ஆகையால் 11 சிறிது மூடிகளை (பால் பாட்டில் மூடி) எடுத்து, அதன் அவள் பெயரின் எழுத்துக்களை எழுது, அதை வைத்து அவள் பெயரை உருவாக்க வைத்தேன். இப்பொழுது கடைசி நான்கு எழுத்துக்களைத் தவிர மற்றவற்றை சரியாக வைத்து விடுகிறாள்.

அதை 6 மாதங்களுக்கு முன்னால் செய்துயிருக்க வேண்டும். எழுதும் மார்க்கிரை அதன் சரியான மூடியுடன் பொருத்த வேண்டும். இதன் மூலம் வண்ணங்களின் பெயர்களை அறியவும், கைகளுக்கு வேலையும் கிடைக்கும்.

இந்த ஐடியா முல்லையில் பின்னூட்டத்தால் வந்தது. பல்லாங்குழிப் பற்றி சொல்லியிருந்தார்கள். பல்லாங்குழியில் போடுவது போல் ஒவ்வொரு குழியிலும் ஐந்து கற்கள் போட வேண்டும். நான் கையால் போடலாம் என்று நினைத்திருந்தேன். தீஷு ஸ்பூனால் போட வேண்டும் என்றாள். முதல் நான்கு ஐந்து குழிகள் வரை ஐந்து கற்கள் தான் போட வேண்டும் என்று நினைவூட்ட வேண்டிருந்தது. அதன் பின் அவளாகச் செய்தாள். ஸ்பூனில் ஒரு கிண்ணத்தில் போட்டுத் தான் பழக்கம். சிறிது குழியில் போடுவதற்கு கவனம் அவசியம். நன்றாக செய்தது எனக்கு ஆச்சரியமாகத் தான் இருந்தது. இதன் மூலம் எண்ணுவதும், கை கண் ஒருங்கினைப்பும் அதிகரிக்கிறது. நன்றி முல்லை.

அதற்கு அப்புறம் கற்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். இரண்டு பென்சில்களை வைத்து கிண்ணத்தைப் பிடித்துக் கொண்டு ஸ்பூனால் கிளறிக் கொண்டிருந்தாள். பென்சில் எதற்கு என்றேன். அது பென்சில் இல்ல அம்மா.. இடுக்கி என்றாள்.

7 comments:

  1. //இப்பொழுது கடைசி நான்கு எழுத்துக்களைத் தவிர மற்றவற்றை சரியாக வைத்து விடுகிறாள்//

    இதுக்கு ஒரு வாவ்!!

    மார்க்கர் நல்ல ஐடியா! பென்சில் மேட்டர் - நல்ல கற்பனை வளம்!


    பல்லாங்குழி எங்க வீட்டில் ஹிட்! கற்களுக்கு பதில் சோழிகள்..ஆர்வம் மாறிக்கொண்டேயிருப்பதில் சிறிது நாட்கள் தொடாம்லிருந்தோம்..நீங்கள் நினைவுட்டினீர்கள்! நன்றி!

    ReplyDelete
  2. பல்லாங்குழியில் சோழிகளை ஸ்பூனில் போடச் சொல்லுங்கள் முல்லை. பப்புவுக்கு எப்பொழுதும் போலில்லாமல் வித்தியாசமாக இருக்கும்.

    ReplyDelete
  3. நன்றி தீஷூ ஐடியாவிற்கு! என்ன சொல்றது...அவளுக்கு இப்போ pouring, spooning எல்லாமே போரடிக்குதுப்பா! ஒருநாள் சொல்றா.. நான் போகல, ஸ்பூந்ல போட வேணாம் அப்படின்னு! அவங்க ஆண்ட்டியும் என்கிட்டே சொன்னாங்க..அவ இதை செய்யச் சொன்னா ஓரமா போய் உட்கார்ந்துக்கறா..இண்ட்ரஸ்ட் இல்லாமன்னு! இப்போ ஆக்டிவிட்டீஸ் வேற மாத்தறாங்க போல கொஞ்சம் கொஞ்சமா..இந்த மாசம் மீட்டிங் போனாத் தெரியும்!

    ReplyDelete
  4. குழந்தைகளுக்கு ரொம்ப எளிதாவோ இல்ல கடினமாகவோ கொடுத்தா இண்ட்ரெஸ்ட் இருக்காது முல்லை. பப்புவுக்கு இது எல்லாம் ரொம்ப எளிதாயிருக்குனு நினைக்கிறேன். அவுங்க ஆண்டி அவளுக்குத் தகுந்த வேற ஆக்டிவிட்டீஸ் மாத்திடுவாங்க.

    இன்னொன்று தேர்ந்தெடுக்கும் பொருட்கள். தீஷுவிற்கு ஸ்கூல ஸீஸனுக்குத் தகுந்த மாதிரி பொருட்களை மாத்திடுவாங்க முல்லை. அதுனால குழந்தைகள் பண்ணுறாங்களாம். இந்த மாதம் ஸ்பூனிங் பொருட்கள் எல்லாம் Pink, purple hearts. பாக்கவே கலர்பூல்லா, இண்ட்ரெஸ்ட்ங்கா இருந்தது. இந்த பொருட்களுக்காகவே அதைப் பண்ணுவதற்கு அவங்க ஸ்கூல போட்டி.

    ReplyDelete
  5. நன்றி தீஷு!

    //குழந்தைகளுக்கு ரொம்ப எளிதாவோ இல்ல கடினமாகவோ கொடுத்தா இண்ட்ரெஸ்ட் இருக்காது முல்லை.//

    உண்மைதான்! இப்போ அவளுக்கு zig-sag puzzles தான் இஷ்டம்! முன்பு அதில் அவ்வளவு ஆர்வம் இல்லை!


    //இந்த மாதம் ஸ்பூனிங் பொருட்கள் எல்லாம் Pink, purple hearts. பாக்கவே கலர்பூல்லா, இண்ட்ரெஸ்ட்ங்கா இருந்தது.//

    ஓ..நல்லாருக்கே கேக்கவே! ஆனால் இங்கே அப்படி இருக்காதுன்னு நம்பறேன்..;-)

    ReplyDelete
  6. வாவ் பெயர் நினைவிலிருந்து எழுதவைக்க அருமையான யோசனை.
    இன்னும் நாலெழுத்துதான... ஓரிரு நாளில் தீஷுக்கு பழகிவிடும்.
    வழக்கம்போல வெகுசிரத்தையா பாடம் செய்றாங்க!

    அந்தக்காலத்தில் எழுத்துப்பயிற்சிக்கு மணலில் எழுதுவதும்,
    பின்னர் எங்க காலத்துல எங்க ஒண்ணாப்பு டீச்சர் (அம்மாதான்:)
    அ ஆ இ
    சாக்பீஸீல் எழுதி அதன்மேலேயே புளியங்கொட்டை வைத்த ஞாபகம் இருக்கிறது.

    அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தமா!?

    ஹீம்..... அதான்னே:)

    ReplyDelete
  7. புளியங்கொட்டை ஐடியா சூப்பராயிருக்கு அன்பு. தீஷுவுக்கும் சொல்லிக் கொடுக்கிறேன்.

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost