ரொம்ப நாளாக பண்ண நினைத்த ஆக்டிவிட்டி. ஐஸ் ட்ரேவிலோ, முட்டை வைக்க பயன்படும் டப்பாவிலோ செய்யலாம். இடுக்கியினால் பஞ்சை எடுத்து ஒவ்வொரு குழியிலும் போட சொன்னேன். இது கைகளுக்கு வேலையும் , one to one correspondanceசும், கண் கை ஒருங்கினைப்புக்கும் நல்லது. பஞ்சுக்கு பதில் இடுக்கியினால் எடுக்க முடிந்த எந்த பொருளையும் பயன்படுத்தலாம். பஞ்சின் texture குழந்தைகளுக்கு விருப்பமாகயிருக்கும் என்பதால் நான் பஞ்சு பயன்படுத்தினேன். அதே போல் இடுக்கிக்கு பதில் tongsசும் பயன்படுத்தலாம்.
ஜாடிக்கு மூடி பழக்கிப்பின், இந்த ஆக்டிவிட்டி பழக்கலாம் என்று இருந்தேன். இதில் என் கைப்பை பட்டனும், தீஷுவின் கிளிப் பெட்டியின் பூட்டையும் திறக்க, மாட்டச் செய்தேன். கைப்பை எளிதாக இருந்தது. கிளிப் பெட்டி கஷ்டமாக இருந்தது. சிறிது நாட்கள் கழித்து முயற்சி செய்ய வேண்டும்.
Games to play with 3 year old without anything
2 years ago
நல்லாருக்கு தீஷூ! இது நம்முடைய பல்லாங்குழியை நினைவூட்டுகிறது!! :-)
ReplyDeleteநல்லா வேலை வாங்கறீங்க பொண்ண.
ReplyDeleteஆமா நீங்க பொருமசாலியா, பொண்ணா!
நன்றி முல்லை.
ReplyDeleteஎன் பொண்ணு தான் பொறுமைசாலி ரிதன்யா. நான் சொல்றத எல்லாம் செய்றாளே.
நானும் பலமுறை இதை நினைத்திருக்கிறேன்...
ReplyDeleteகண்டிப்பாக தீஷுதான் பொறுமைசாலி...
அது அவளின் முகத்திலேயே வெகு அழகாகத்தெரியும்,
மிகுந்த ஈடுபாட்டுடன் செய்வது ஒவ்வொரு படத்திலும் நான் வியப்பது!
அதுக்கு அப்புறம் கண்டிப்பாக அம்மாவையும் பாராட்டியே ஆகவேண்டும்
ஒரு பள்ளிஆசிரியை செய்வது வேறு... அம்மாவாக உண்மையில் பெரியவிஷய்ம், என்றும் தொடருங்கள்.
பதிவுக்கு சம்பந்தமில்லாமல்...
தீஷு ஏன் செயின் போடல:)
நன்றி அன்பு. தீஷுவிற்கு ஈடுபாடு இல்லையென்றால், நாங்கள் செய்வதை நிறுத்து விடுவோம்.
ReplyDeleteதீஷு ஸ்கூலுக்கு போகும் பொழுது செயின் போடுவதில்லை. அவள் விருப்பப்பட்டு கேட்கும் அன்று மட்டும் போடுவேன். அன்னைக்கு அவள் கேட்கவில்லை.