Saturday, February 14, 2009

குதிக்கும் தீஷு

தீஷு அவள் அப்பாவின் ஷாக்ஸ்களை மடித்து வைத்த ஆர்வத்தைத் தொடர்ந்து, அவளுக்கு ஹாங்கரில் துணிகளை மாட்டச் சொல்லித் தரலாம் என்று நினைத்தேன். தீஷுவுடைய உடைகளை ஹாங்கரில் தான் மாட்டி வைத்திருக்கிறோம்.ஒரு டாப், ஒரு பாண்ட் என இரண்டையும் ஹாங்கரில் மாட்டச் சொல்லித் தந்தேன். ஹாங்கரில் மாட்டி முடித்தவுடன் அவள் டால் ஹாவுசில் மாட்டி வைத்து விட்டாள்.



மீண்டும் Funnel மூலம் தண்ணீர் பாட்டிலில் தண்ணீன் ஊற்றினோம். சிறிது நேரம் Funnel வழியாக தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள். அடுத்து நேரடியாக பாட்டிலில் தண்ணீரை ஊற்றினாள். சிறிது தண்ணீர் கீழே கொட்டியது. அவளே ஸ்பாஞ்ச் வைத்து துடைத்து விட்டாள்.



சமையல் அறையிலுள்ள தரையில் ஒவ்வொரு கட்டத்திலும் குதிக்க சொன்னேன். கட்டத்திலுள்ள கோட்டில் கால் படக்கூடாது. கட்டத்தில் குதிதாள். ஆனால் கோடுகளை மிதித்தாள். இரண்டு முறை குதித்தவுடன் சோர்ந்துப் போய் விட்டாள். இனி தினமும் இரண்டு நிமிடங்கள் குதிக்க வைக்கலாம் என்று இருக்கிறேன்.

7 comments:

  1. சமத்து தீஷூ! பப்புவிற்கு ஒரு டால் ஹவுஸ் செய்ய வேண்டுமென் நினைத்திருக்கிறேன்..எனி ஐடியா?

    //அவளே ஸ்பாஞ்ச் வைத்து துடைத்து விட்டாள்//

    அருமை!!

    ReplyDelete
  2. இந்த டால் ஹவுஸ் வாங்கினது முல்லை. ப்ளாஸ்டிக் தான் மரமில்லை.strong cardboard பாக்ஸ்ல பண்ணினாலும் பப்பு பொம்மை வச்சி எடுக்கிறப்ப விழாமல் இருக்குமானு தெரியல. மரத்தில kit கிடைச்சா வீட்டில பண்ணலாம் முல்லை. http://www.letsbuildadollhouse.com/
    instruction இருக்கு. ஆனா அது ரொம்ப பெரிய வேலை. யாராவது carpentary தெரிஞ்சவங்க எளிதா செய்ய வாய்ப்பிருக்கு.

    ReplyDelete
  3. மூன்று ஸ்ஷு பாக்ஸ் வச்சி மூணு லேயர் டால் ஹவுஸ் ஒருத்தவுங்க பண்ணியிருந்தாங்க. ஆனா நம்ம fancyயா படியெல்லாம் இருக்கனும்னா கொஞ்சம் மெனக்கெடனும்.

    ReplyDelete
  4. ஓ நன்றி தீஷு! மரத்திலெல்லாம் செய்ய வாய்ப்பு கம்மி! ஆனா காட்போர்டிலே பப்புவையே வைத்து செய்ய வைக்க எண்ணியிருக்கிறேன்...சும்மா கொஞ்ச நாளைக்குதான் அது உபயோகமாகும் என்றாலும், நல்ல டைம் பாஸா இருக்கும் இல்லையா..அதான்!

    ReplyDelete
  5. இந்த லிங்க் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.

    http://www.elsiemarley.com/cardboard-dollhouse.html

    ReplyDelete
  6. Playhouse also is there in my Collection. But when I search for DIY kit, all are US based sites...
    so, நாம்பளே தச்சர் வச்சு செஞ்சுட்டா போச்சு முல்லை. ரெடியா...:)

    ReplyDelete
  7. தச்சர் வச்சி பண்றது யார்கிட்டையும் இல்லாத மாதிரி நல்லா unique இருக்கும்.

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost