என்னுடைய புகைப்படத் திறமைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். முக்கால்வாசி போட்டோவில் தீஷுவின் தலை இருக்காது. அதனால் என் திறமையை நம்பாமல், தீஷு பிறந்தது முதல் குறிப்பிட்ட இடைவெளிகளில் அவளை ஸ்டுடியோவில் போட்டோ எடுக்கும் பழக்கம் வைத்திருக்கிறோம். ஒரு வயது வரை ஒவ்வொரு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை எடுத்தோம். அதற்கு அப்புறம் இரண்டு வயது வரை ஆறு மாதத்திற்கு ஒரு முறையென இரண்டு படங்கள் மட்டும் எடுத்தோம். இரண்டு வயதிற்கு அப்புறம் கடந்த ஒன்பது மாதங்களில் எடுக்கவில்லை. அவள் முகத்தில் ரொம்ப வித்தியாசம் இல்லை என்று சமாதானம் செய்துக் கொண்டோம். ஆனால் கிளம்பும் முன்னால் ஒன்று எடுத்து விடலாம் என்று ஒன்று எடுத்தோம். தலை முதல் கால் வரை எடுத்த போட்டோவைப் பார்க்க எனக்கு வித்தியாசமாக இருந்தது. அதனால் ஸ்கேன் செய்து ப்ளாகில் ஒரு உருப்படியான போட்டோ ஒன்று போடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் 10*13 இன்ச் போட்டோவை ஸ்கேன் செய்தால் தலை அல்லது கால் வெட்டப்பட்டது. Shrink செய்துப் பார்க்கவில்லை. சரி.. தீஷுவின் போட்டோ வெட்டுப்பட்டு தான் ப்ளாகில் இருக்க வேண்டும் போல என்று நினைத்துக் கொண்டேன்.
போட்டோ எடுக்க மாலுக்குச் சென்ற பொழுது, டாலை டால் ஸ்டோலரில் வைத்து மாலினுள் தள்ளிக் கொண்டே வந்தாள். அவள் ஸ்டோலரை நான் வெறுமனே தள்ளிக் கொண்டே போனேன்.எதிர் வந்தவர்கள் எல்லாம் என்னைப் பார்த்து சிரித்தப் போது எல்லாம், கேலியாக சிரிக்கிறார்களோ என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் மாலிலிருந்த இரண்டு மணி நேரமும் தூக்கச் சொல்லவே இல்லை. இனிமேல் நடக்கிற மாதிரி எங்க போனாலும், அவ ஸ்டோலரை எடுக்கிறோமோ இல்லையோ, டால் ஸ்டோலர் எடுத்துத்திட்டு போகனும் என நினைத்துக் கொண்டேன்.
Games to play with 3 year old without anything
2 years ago
awwwsome! she looks like a doll!! :-)
ReplyDeleteவாவ்
ReplyDeleteசூப்பரா இருக்காங்க தீஷூ
சுத்திப்போடுங்க குழந்தைக்கு
ரொம்ப........... அழகு.
இதுவரைக்கும் நீங்க ப்லாக்ல போட்ட தீஷீ போட்டோல மிஸ் ஆன அவளோட சிரிப்பு இதுல ஃபுல் ஃபில் ஆகிடுச்சு.