Wednesday, February 18, 2009

இப்பொழுது வீட்டில்..

1. தீஷு தன் பொம்மையைப் பற்றி எப்பொழுதும் ஏதாவது கேள்வி கேட்டுக் கொண்டேயிருக்கிறாள். சில நாட்களுக்கு முன் தன் அப்பாவிடம் "ஏன் டாலோட விரலை மடக்க முடியவில்லை" என்றாள். அவள் அப்பாவும் "டாலுக்கு கையில Bone இல்லை என்றார். நேற்று என்னிடம் வந்து "ஏன் டால் பேசல" என்றாள். நான் பதில் சொல்லும் முன் அவளாகவே, "டாலுக்கு வாயில Bone இல்லையா அம்மா" என்றாள்.

2. கோயிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தோம். தீஷுவை அவள் அப்பா சாப்பிட வைத்துக் கொண்டிருந்தார். தீஷு சாப்பிடாமல் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள். பொறுமை இழந்து "சீக்கிரம் சாப்பிடு.. கிளம்பனும்..அப்பாவுக்கு டைம் இல்ல" என்றார். அசராமல், ஒரு வினாடி கூட தாமதிக்காமல் அடுத்த கேள்வி தீஷுவிடமிருந்து பறந்து வந்தது "அம்மாவுக்கு டைம் இருக்கா?"

3. ஆங்கிலத்தைப் பள்ளியிலும், வெளி இடங்களிலிருந்தும் கற்றுக் கொள்வதால், தீஷுவின் ஆங்கில வார்த்தைகளின் உச்சரிப்பு அமெரிக்கர்களின் உச்சரிப்பு போன்று இருக்கும். வாடர், மாமி(மம்மி), த்ட்டி(thirty) போன்று. ஆனால் இங்கிலீஷ் என்று சொல்லத் தெரியாது. Engeesh என்று சொல்கிறாள்.

4. இந்தியா திரும்புவதற்காக Pack பண்ணிக் கொண்டிருந்தோம். தீஷு முதலில் அவள் பொருட்களை பெட்டியில் வைக்க விடவில்லை. பெட்டியில் வைத்தால் தான் இந்தியா போய் விளையாட முடியும் என்றவுடன், சரி என்று எழுந்து போய்விட்டாள். சிறிது நேரத்திற்கு பிறகு, பாண்ட், shoe எல்லாம் போட்டு கொண்டு வந்து, "I am ready" என்றாள். "எங்க போறடா?" என்றதற்கு "இந்தியாவிக்கு" என்றாள்.

4 comments:

  1. //"டாலுக்கு வாயில Bone இல்லையா அம்மா" என்றாள்//

    :-))

    நல்லா கேக்கறாங்க கேள்வி!!

    ReplyDelete
  2. "எங்க போறடா?" என்றதற்கு "இந்தியாவிக்கு" என்றாள்.

    ச்சோ ச்வீட் டியர் தீஷூ.

    "அம்மாவுக்கு டைம் இருக்கா?"
    ம், இப்படிதான் அம்மாவை கேள்வி மேல கேள்வி கேட்டு அசரடிக்கணும்
    என்ன.

    ReplyDelete
  3. நன்றி நாமக்கல் சிபி

    ஆமாம் சந்தனமுல்லை. கேள்விக்கு பதில் சொல்வது தான் கஷ்டமாயிருக்கு.

    அமிர்தவர்சினி அம்மா, இன்னும் கேள்வி கேட்கனுமா? இதுவே தாங்க முடியல.

    நன்றி அமுதா.

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost